பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 7 அங்கவை சங்கவை என்பவர்களின் திருமணத்தை ஒளவையார் வெகு சிறப்புடன் முடித்து வைக்கலானர். அதன் பொருட்டு ஒளவையார் அக்கன்னிகை களைத் திருக்கோவலூர் அரசனை தெய்வீகனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். ஒரு வெண்பா பாடி விநாயகரை வரவழைத்து, அவர் கையினலேயே தமிழ் நாட்டின் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு ஒலே எழுதுவித்து அக் காட்டிலுள்ள தேவதை மூலம் அனுப்பினர். அவ் வோலேகளைக் கண்ட மூவேந்தரும் உடனே திருக் கோவலூர் வந்து சேர்ந்தனர். திருமணமும் இனிது நடந்தேறியது. முடிவில் ஒளவையார் மூவேந்தர்களையும் உண்டு செல்லுமாறு கூறினர். அவர்கள் ஒளவையாரைச் சோதிக்க எண்ணி, பனம்பழம் கிடைக் காத காலத்தில் பனம்பழம் தந்தால், மண விருந்து உண்பதாகக் கூறினர். உடனே ஒளவையாகும். அவர் கள் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, அருகில் கிடந்த பனந்துண்டை நோக்கி, 'பனந்துண்டமே, மூவேந்தர்கள் பாரிமகளிர் திருமணத்தின் பொருட்டு வந்துள்ளனர். அவர்கள் களிக்கும் வண்ணம் நன்கு வளர்ந்து, நுங்கு காய்த்துப் பழமும் பழுத்து விளங் குக' என்ற கருத்தமைந்த ஒரு பாட்டுப் பாடினர். உடனே அப்பனந்துண்டம் குருத்து விட்டு வளர்ந்து பெரிய மரமாகி நுங்குக் குலேகளை விட்டுப் பழுத்துப் பனம் பழத்தைத் தந்தது. அது கண்ட மூவேந்தரும் ஒளவையாரின் வல்லமையைப் போற்றி மகிழ்ந்தனர் ; உணவு உண்டு களித்தனர். பின்னர் ஒளவையார் சேரனே நோக்கி, பூநீதன. மாக ஆடு ஒன்று தருமாறு கூற, அவன் பொன்னல்,