பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 9 யின் வருத்தத்தைப் போக்க எண்ணி வெட்டப்பட்ட பலாமரம் மீண்டும் தழைக்குமாறு, 'கூரிய வாளால் வெட்டப்பட்ட பலாமரமே, கப்பும் கிளேயுமாய் வளர்ந்து காயும் பழமாகக் காய்த்துப் பழுத்து முன் போலச் செழிப்புடன் விளங்குக' என்ற பொருளில் ஒரு பாட்டைப் பாடினர். உடனே வெட்டப்பட்ட அப்பலாமரம் மீண்டும் தழைத்து வளர்ந்தது. ஆது கண்ட மூத்தாள் பெரிதும் மகிழ்ந்து ஒளவையாருக்குத் தான் சமைக்க வைத்திருந்த தினேயரிசியை ஒரு துணியில் முடிந்து கொடுத்து அனுப்பினுள். ஒளவை யாரும் அதைப் பெற்று மேலே நடந்து சென்ருர். பேய்கள் சாபம் நீங்கினமை ஒரு கால் ஒளவையார் வெகு தாரம் நடந்து களைப்பு மேலிட்டு இருட்டும் வேளையில் ஒர் ஊருக் கருகிலிருந்த சாவடியை அடைந்தார். அன்றிரவை அங்கேயே கழிக்க எண்ணிப் படுத்துக் கொண்டார். இரவு முதற்சாமம் ஆனதும் பெண் ஆவேசம் ஒன்று ஒளவையாரை நோக்கி எற் றெற் றெற' என்று பயங்கரமாகச் சப்தமிட்டுக் கொண்டு வந்தது. ஒளவையார் உறக்கம் நீங்கி அப் பெண் பேயைப் பார்த்து, 'வெண்பா இருகாலில் கல்லானே வெள்ஓலே கண்பார்க்கக் கையர்ல் எழுதானைப்-பெண்பாவி பெற்ருளே பெற்ருள் பிறர்நகைக்கப் பெற்ருளே எற்ருேமற் றெற்ருேமற் றெற்று” என்று ஒரு .ெ வ ண் பா பாடினர். ஒளவையாரு டைய பாட்டைக் கேட்டுத் தன் பேய் வடிவம் நீங்கிப் பேண்ணுருவுடன் ஒளவையாரை வந்து பணிந்தது.