பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 11 தன்னை விரும்பி ஒலே எழுதிப்போட்ட அரச குமாரி அநியாயமாய் இறந்ததை அறிந்த, அரச குமாரன் பிறகு திரும்பி வந்து அதே சத்திரத்தில் தானும் தற்கொலே செய்துகொண்டு பேயாய்த் திரிந்து வந்தான். பெண் பேயின் சாபத்தை நீக்கிய ஒளவை யாரை அவ் ஆணுவேசமும் வந்து வணங்கிற்று. ஒள வையார் அவ் ஆண் பேயை நோக்கி, யுேம் அவ் உறை யூரிலேயே பிறந்து நீ விரும்பிய அரசகுமாரியை மணந்து கொள்வாய்” என்று அருளினர். ஒளவையாரும் சங்கப் புலவர்களும் மதுரையில் உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் அ ர சாண் ட போது திருவள்ளுவர் தாம் முப்பாலின் மேல் பாடிய ஆயிரத்து முந்து ற்று முப்பது குறட்பாக்களைக் கொண்ட பெரிய ஏட்டுச் சுவடிகளைத் தாக்கிக்கொண்டு மதுரைச் சங்கப் புலவர்முன் அரங்கேற்றஞ் செய்யச் சென்று கொண் டிருந்தார். அப்போது ஒ ள ைவ ய | ரு ம் சங்கத் தை நோக்கி வந்து கொண்டிருந்தார். இடையில் தமது தம்பியாராகிய திருவள்ளுவரைக் கண்டதும், அவ்வையார் நின்று, கலம் விசாரிக்க ஆரம்பித்தபோது மழை பெய்யத் தொடங்கியது. உடனே திருவள்ளுவர் ஒர் ஆலமரத்தின் கீழ் போய் கிற்க, . ஒளவையார் அரு கில் இருந்த ஒரு புளியமரத்தின் கீழ் கின்று கொண்டு, தம் தம்பியை நோக்கி, அன்புமொழியில் ஏடா, இச் சிற்றிலைக்கீழ்வா' என்று கூறினர். அவரும் அவ்வாறே சென்றனர். பின்னர் ஒளவையார், அருகில் வந்த தம் தம்பியார் கையில் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து, 'இது என்ன?’ என்ருர். அதற்குத் திரு வள்ளுவர், 'அதுதன் அறம், பொருள், இன்பம் என்