பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் iš ‘ஐயம் இடுமின், அறநெறியைக் கைப்பிடியின்; இவ்வள வேனும் அன்னம் இட்டுண்மின்; -தெய்வம் ஒருவனே என்றும் உணரவல் லீரேல் அருவினேகள் ஐந்தும் அறும்’ என்று பாடித் தமது குறிப்புக்குப் பொருள் கூறினர். பின்னர் அரசன் முன்னிலையிலும் சங்கப் புலவர்கள் முன்னிலேயிலும் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது. நூலின் பொருளேக் கேட்ட புலவர்கள் வியந்து தனித் தனிப் பாடல்களைப் பாடினர். அப்பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவர் மாலை எனப்படும். சுட்ட பழமும் சுடாத பழமும் ஒருகால் ஒளவையார் ஒரு காட்டு வழியில் கடந்த போது களத்து ஒரு காவல் மரத்தடியில் வந்துகின்ருர், சுப்பிரமணியக் கடவுள் ஒளவையாருடன் விளையாட வும் சில அரிய கருத்துக்களை வெளிப்படுத்தவும் எண்ணி, ஒரு மாட்டுக்காரப் பையன் போல் அந் நாவல் மரத்தின்மேல் அமர்ந்து பழம் பறித்துத் தின்றுகொண் டிருந்தார். ஒளவையார் அம்மாட்டுக்காரப் பையனே நோக்கித் தமிக்கும் கொஞ்சம் நாவற்பழங்கள் போடு மாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவன் ஒளவையாரை நோக்கிச் சுடுகிற பழம் வேண்டுமா? அல்லது சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான். ஒளவையார் சிறிது நேரம் யோசித்தும் ஒன்றும் விளங் காமல், 'சுடாத பழமே போடு தம்பி என்ருர். மாட் டுக்காரப் பையன் ஒரு கிளேயைப் பிடித்து உலுக்கக் காய்களும் பழங்களுமாகக் கீழ்ே உதிர்ந்தன. ஒளவை யார் பழத்தைப் பொறுக்கி அதில் ஒடடிக்கொண்