பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-وي ஒளவையார் #5 முருகன், 'இனியது யாது?’ என்று கேட்க ஒளவையார், 'தனித்து இருப்பது இனிமையானது இவ்வாறு தனித்து இருப்பதைவிட, இறைவனைத் துதித்துக் கொண்டிருப் பது இனிமையானது. ஆண்டவனத் துதிப்பதைவிட, இனிமையானது, அறிஞர்களோடு சேர்ந்து வாழ்வது. இதனேவிட, இனிமையானது அவ்வறிஞர்களேக் கனவி லும் கனவிலும் கண்டு களிப்பது” என்று கூறினர். பின்பு முருகப்பெருமான், 'பெரியது எது?’ என்று கேட்க, ஒளவையார், 'உலகம் பெரியது. அவ்வுலகம் பிரமல்ை படைக்கப்பட்டது. அப்பிரமன் திருமாலின் உக் தியிலிருந்து வந்தவன். அத்திருமால் திருப்பாற்கடலில் உறங்குபவன். அக்கடல் அகஸ்தியரால் குடிக்கப்பட் டது. அவ்வகத்தியர் குடத்தில் இருந்து தோன்றியவர். அக்குடம் பூமி மண்ணுல் ஆனது. அப்பூமி ஆதிசேட ல்ை சுமக்கப்படுவது. அவ்வாதிசேடன் பார்வதி தேவி யின் கை விரல் மோதிரமாக இருப்பவன். அப்பார்வதி பரமசிவனர் உடலில் பாதிவடிவாய் இருப்பவள். அப் பரமசிவம் பக்தர்களின் மனத்தில் ஒடுங்குபவர். ஆதலின், பக்தர்களுடைய பெருமை எல்லாவற்றையும் விடப் பெரியது” என்று கூறினர். இதன்பின் குமரக் கடவுள் "அருமையானது.எது?” என்று கேட்க, மானி டராகப் பிறப்பதே அருமை. அப்படிப் பிறந்தாலும் கூன் குருடு, செவிடு, பேடு, இல்லாமல் பிறப்பது அருமை யானது. இவ்வாறு அங்கப் பழுது இல்லாமல் பிறக் தாலும், ஞானம் கல்வி இவற்றை விரும்பிப் பெறுதல் அருமை. அப்படி அவ்விரண்டையும் பெற்ருலும், தான்ம் தவம் செய்வது. அருமை. அப்படிச் செய் வேர்க்குவானவர் நாடு வழி திறந்துவரவேற்கும்.இந்த மைப்பாடு அரிதினும்.அரிது’ என்றும் விடை