பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 17 பாடப் போகிருேம்?” என்று திகைத்து முகம் வாடித் தத்தம் வீடு கோக்கி வந்து கொண்டிருக்கையில், ஒளவையாரைக் கண்டனர். ஒளவையார் புலவருடைய வருத்தத்திற்குக் காரணம் கேட்டு அறிந்து கொண் டார். உடனே ஒளவையார் புலவர்களேச் சிறிதும் அஞ்சவேண்டா என்று கூறித் தாமே நாலுகோடிப் பாடல்களையும் பாடித் தருவதாகக் கூறி. 'மதியாதர் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி யுறும் . உண்ணிர் உண்ணிர்என்றே ஊட்டrதார் தம் (மனையில் உண்ணுமை கோடி யுறும் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார். தம்மோடு கூடுவதே கோடி யுறும் கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி யுறும்” என்று இந்நான்கு பாடல்களேப் பாடித்தரப் புலவர்களும் தங்கள் கவலே நீங்கப் பெற்றவராய் மறு நாள் காலே அரசன் முன் அப்பாடல்களைக் கொண்டுபோய்ச் சமர்ப் பித்தனர். அரசனும் பாடலேக் கண்டு மகிழ்ந்தான். ஏழைச் சிறுவன் பீதாம்பரம் பெற்றது ஒரு நாள் சோழ மன்னன் யானே மீதுளர்ந்து ககர வீதிகளில் பவனி வந்து கொண்டிருந்தான். அரசனைப் பார்க்க ஏராளமான மக்கள் தெருக்களில் கூடியிருக் தனர். எல்லோரும் குது.ாகலத்தில் ஆழ்ந்திருந்த அந்தச் சமயத்தில் ஒர் ஏழைத் தாயின் குழைந்தை மட்டும் அழுதுகொண்டிருந்தது. அச் சிறுவன் தனக்கு அரசன் போர்த்தியிருக்கும் பீதாம்பரம் வேண்டுமென்று 2