பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 23 ஒருகால் சோழன் தன் சபையில் கம்பர் சில: பாடல்களேப் பாடக் கேட்டுப் பாரகாவியம் பாடுவதில் நிகரானவர் யாரும் இல்லே என்று புகழ்ந்து பேசினன். அதுகேட்ட ஒளவையார், அவ்வாறு யாரும் செருக்கை மேற்கொள்ளலாகாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் திறமை இருப்பது இயல்பு. துரக்கணங்குருவியின் கூட்டை எவரும் கட்ட இயலாது. கறையான் புற்றையும் எவராலும் செய்தமைக்க இயலாது. ஆகவே, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு செயல் எளிதாகும். அதல்ை பிறர் பயன் அற்றவர் என்று கூறிவிடலாமோ ?” 'சித்திரம் எழுதுவது கைப் பழக்கததால் அமையும். செந்தமிழ்ப் பயிற்சி நாப் பழக்கத்தால் ஏற். படும். கல்வி மனப் பழக்கத்தால் உண்டாகும். நட்பு கடைப் பழக்கத்தால், தயவும் கொடையும் பிறவிக் குணத்தால் அமைவன” என்ற கருத்துக்களில் செய்யுளில் விடையிறுத்தார். பின்னர்க் கம்ப ருடைய பாட்டைச் சபையோர் புகழ்ந்தமைக்கு விடையாக, கை நிறைய மோதிரம் இருக்கவேண்டும். தம்மை இருவர் புகழ்பவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் பாடல் நஞ்சு போன்றும் வேம்பு போன்றும் இருந்தாலும், அதை யாவரும் புகழ்ந்தே பேசுவர். இது உலக இயற்கை” என்ற பொருளில் செய்யுளில் பதில் அளித்தனர். இவ்வுரைகளைக்கேட்டுச் சோழன் மகிழ்ந்தான். இவ்வாறு ஒளவையார் பலவாருன கருத்துக்கள் அடங்கிய பாடல்களின் மூலம் பல அறவுரைகளே வெளியிட்டதைக் கம்பர் அறிந்து அதன்பின் ஒளவை