பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 25 வாழ்த்தினர். ஒளவையார் மட்டும் பாடலால், வாழ்த்தாமல், “வரப்புயர” என்று மட்டும் கூறி அமர்ந்தனர். அவ்வாறு கூறியதைக் கண்ட புலவர் கள், “அரசனே வாழ்த்துவது விட்டு ஒளவையார் வரப்பினை வாழ்த்தினரே, இது இங்குப் பொருத்தமில் லேயே’’என்று இழித்துரையாடினர். அப்போது ஒளவை யார் புலவர்கட்கு அறிவு கொளுத்த எண்ணிப் புலவர் களே, நான் வரப்பை வாழ்த்திய வாழ்த்தில் மன்னனே யும் உங்கள் வாழ்த்துக்களேவிடச் சிறந்த முறையில் வாழ்த்தி இருக்கின்றேன். வரப்பு உயர்ந்தால் நீர் உய. கும்; கீர் உயர்ந்தால் கெல் உயரும்; நெல் உயர்ந்தால்குடி உயரும், குடியுயர்ந்தால் கோன் உயர்வான் அல்லவா? இது அரசனே வாழ்த்திய வாழ்த்து ஆகாதோ ?” என்று கூறிப் புலவர் வாயை அடக்கினர். புலவர்கள் தம் அறி யாமையை எண்ணி வருந்தி, இப்படித்தான் துனலும் தன் வாயால் கெடுகிறது என்பதை உணர்ந்து ஒளவை யாரிடம் தம்மை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்ட னர். ஒளவையாரும் அங்கு இருந்து புறப்பட்டனர். ஒளவையார் கைலாயஞ் சேர்ந்தது ஒரு நாள் ஒளவையார் விநாயகக் கடவுளின் பூசையை அவசரமாகச் செய்துகொண்டிருந்தார். அப் பொழுது விநாயகக் கடவுள் ஏன் இந்த அவசரம்” என்று கேட்டனர். ஒளவையார், 'சேரமான் பெரு மாள் காயனர் சுந்தரமூர்த்தியுடன் திருக்கைலாயம் செல்கிரு.ர். அவர் என்னையும் உடன் அழைத்தார். அதல்ை பூசையை விரைவாகச் செய் கிறேன்” என்று கூறினர். விநாயகக் கடவுள், ஒளவையாரிடம் அவர் ஆளுக்குமுன் திருக்கைலாயத்தில் தாம் கொண்டு சேர்ப் பதாகக் கூறிப் பூசையை முறைப்படி செய்யக்கூறினர்.