பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒட்ட க் கூத்தர் பிறப்பும் கல்வியும் சோழ நாடு பல சிற்றுார்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அச்சிற்றுார்களில் மலரி என்னும் ஊரும் ஒன்ருகும். அவ்வூரில் பல குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அம்மக்களுள் செங் குந்தர் மரபினரும் ஒரு வகுப்பினர் ஆவர். அச்செங் குந்த மரபினுக்கு ஒரு தனிப்பெருஞ் சிறப்புக் தர ஒரு பெரியார் பிறந்தருளினர். அவரே கூத்தர் எனப்படுவார். கூத்தர் என்னும் பெயர் நடராசப் பெருமானது திருப்பெயராகும். கூத்தரது பெற்ருேள் சிவபெருமான் திருவடிகளில் சிறந்த அன்புடையார். ஆதலின், தமக்கு அரும் பெறல் மகனகப் பிறந்த குழக் தைக்குக் கூத்தர் என்னும் பெயரைச் சூட்டி அருமை யாக அழைத்து வந்தனர். கூத்தரது பெற்றேர் முக்கண் முர்த்தியினிடத்து முதிர்க்க அன்புடையவர்கள் ஆதலால், அக்கண்ணுதல் பெருமான் மீது மூவர் முதலிகளாகிய ஆளுடைய அரசும், ஆளு.ைய பிள்ளேயும், ஆளுடைய நம்பியும் பாடியருளிய தேவாரங்களேயும், ஆளுடைய அடிகள் திருவாய் மலர்ந்த திருவாசகத்தேனையும் இளமை முதற் கொண்டே கற்பித்து வந்தனர். சமயநூல்களைப் பயிற்று வித்ததோடு இன்றி, இலக்கண இலக்கியங்களையும் கற். பித்து வைத்தனர். கல்வித் துறையில் கரைகண்டு புலமை மிகுந்த தங்தையார் கூத்தருக்குத் தொல்காப் பியம் அகத்தியம் முதலிய இலக்கண நூற்களையும், பக் துப்பாட்டுஎட்டுத்தொகைமுதலானசங்க நாற்களேயும்