பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூத்தர் 29 கற்பித்துவந்தனர். ஆகவே, கூத்தர் நல்ல தமிழ்ப்புலமை பெற்றுச் சிறந்துவிளங்கினர். வடநூற் பயிற்சியும் இவ ருக்கு இருந்தது என்பது இவர் பாடியுள்ள நூற்களில் அவ்வட சொற்களையும் தொடர்களையும் தகுந்த இடங் களில் ஆண்டு இருப்பதில் இருந்து தெரியவருகிறது. பெயரும் பெயர்க் காரணங்களும் கடராசப் பெருமானிடத்து ஒட்டக் கூத்தரின் அருமைத் தந்தையாரும் தாயாரும் வைத்த அன் பின் பெருக்கினல் கூத்தர் என்ற பெயரிட்டு அழைத்ததை முன்பு கண்டோம். கூத்தர் நன்கு வளர்ந்து கல்வி கேள்விகளில் தலே சிறந்து விளங்க விளங்கக் கூத்த முதலியார் என்றும் கூறப் பட்டு வந்தார். இவர் பல கவிகளைப் புனேயத் தொடங் கினர். அக்கவிகள் வருணனைகள் மிகுந்து காணப் பட்டன. அவ்வருணனைகளும் உலக நடை கடந்து விளங்கின. இவ்விரு காரணங்களால் இவரைக் கெளடப் புலவர் என்று அழைக்கவும் தொடங்கினர். வருண னேக் கவிகளையும், உலக ைடக் கும் அப்பாற் பட்ட கற் பனை கள் அ டங்கிய கவிகளையும் இவர் பாடிய தட்சயாக பரணி என்னும் நாலில் காணலாம். அக்கவிகளையும் அயைாசம் இன்றி விரை வுடன் பாடவும் தொடங்கினர். விரைவுட்ன் பாடும் இவரது திறத்தை மெச்சிய புலவர்கள் இவருக்குக் கவிராட்சதன் என்னும் பட்டம் ஈந்து பாராட்டினர். இவர் தம்மை ஆதரித்த அரசனுல் காளமாகிய விருதினைப் பெற்றமையால் காளக்கவி, என்றும் கூறப்பட்டனர். இரு மொழி நூல்களின் கருத்தைத் இடங்களில் பாடிவந்ததால் இவரை யாவரும் மெக்சினர். கூத்தர் கலேமகள் அருளே கிரம்பப்