பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூத்தச் 31 சீரும் சிறப்பும் பேரும் புகழும் திருவெண்ணெய் கல்லூரில் வாழ்ந்த வேளாளர்கள் புலவர்களே ஆதரிப்பதில் முன்னணியில் கிற்பவர்கள். அவர்களிலும் சடையப்ப வள்ளலாருடைய முன்னுே ரும் பின்னுேரும் இந்தத் தொண்டில் மிகுதியும் ஈடு பட்டவர்கள். சடையப்ப வள்ளலாரின் திருத்தாதை யார் சங்கர முதலியார் என்பவருக்கு உதவியாக ஒட்டக் கூ த்தர் சிலகாலம் இருந்து வந்தனர். இவரது உதவிபெற்ற முதலியார் புலவர்க்கு உண்டி, உறையுள், முதலான மற்றும் பலவாகிய வாழ்க்கைக்குத் தேவை யானவற்றைக் கொடுத்து உதவிவந்தார். இதல்ை, ஒட்டக் கூத்தர் வறுமையால் வாடாது நலனு றத் தம் வாழ்க்கையினே கடத்திவந்தார். தமக்கு ஆதரவு நல்கிய முதலியாருக்குத் தம் கன்றியினைக் காட்டும் பொருட்டு அவர் மீது நாலாயிரக் கோவை என்னும் நூலைப் பாடி யருளினர். சிலகாலம் முதலியாருடன் இருந்து வாழ்ந்த பின்பு, அரசரை நாடி அவர்களின் ஆதரவையும் பெற் றத் தம் தமிழ் அறிவினை அவர்கட்கும் காட்டப் புலவர் விரும்பினர். இவ்விருப்பம் மேற்கொண்ட புலவர் நேரே சோழ நாட்டு மன்னனை விக்ரமன அடைந்தார். இவர் காலத்தில் சோழ நாட்டைக் காத்து வந்த மன்னன் அவனேயாவன். அவன் இவரது தமிழ் அறிவின் திறத்தை கன்கு அறிந்து கொண்டனன். இவரைத் தனது அரசவைப் புலவராக ஏற்பாடு செய்து கொண்டான். புலவர் இல்லாத அவை பொலி தல்லவா? இவரைத்தன்ஆத்தானக்கவியாக ஏற்றுக் கண்டதும், இவருக்குக் கம்பளம், கங்கணம், யான், b, விருதுச் சின்னங்கள், பொன்னரி மால்ே பொருள்களே சந்து சிறப்புச் செய்தனன்.