பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூத்தர் 器 தலேப்பட்டனர். கூத்தரும் குலோத்துங்கனும் விக்ரம சோழன் ஒட்டக் கூத்தரோடு பல் லாண்டு இருந்து தமிழ்ச் சுவையினச் சுவைக்கும் பேற் நினைப் பெற்றிலன். மண்ணுடு விடுத்து விண்ணுடு புகும் காலம் நெருங்கவே, நிலவுலகைப் பிரிந்து சென் முன். இவனுக்குப் பிறகு குலோத்துங்கன் அரசுக் கட்டில் ஏறினன். தனேயனும் தந்தையாரைப் போலவே புலவர் பெருமானிடத்துப் பேர் அன்பு கொண்டிருந்தான். அன்பு கொண்டதோடு இன்றிப் புலவர் பெருமானேத் தன் ஆசிரியனுகவும் கொண் டான். இவர்பால் பல தமிழ் நூல்களேப் பயின்று வந்தனன். ஐந்திலக்கணங்களையும் ஓதி உணர்ந்தனன். இவன் மீதும் ஒர் உலா பாடினர். குலோத்துங்கனுக்குப் பிறகு குமார குலோத்துங்கன் பட்டத்துக்கு வந்தான். அவனும் தன் தந்தையாரைப் போலவே . تم بيتاي கூத்தரிடத்தில் பேர் அன்பு பூண்டு, ஆசிரியராகக் கொண்டு அருந்தமிழ் நூல்களைப் பயின்று வந்தான். தாகைக் கவி புனேயும் ஆற்றலையும் பெற்றினன். ஒட்டக் கூத்தரையே தனக்குரிய தந்தையாகவும் தாயாகவும் ஞான குருவாகவும் கருதி வழிபட்டு வந்தான் இங்ஙனம் மூவரையும் அவர்கள் இருந்த காலத்தில்

ன். அதுவே கூத்தனுர் என்பது,