பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தமிழ்ப் புலவர் ஆறுவர் குமார குலோத்துங்கன் அரசிருக்கையைத் தான் ஏற்றபோது பலரும் பலவாறு வாழ்த்தினர். அப் பலருள் ஒட்டக் கூத்தரும் ஒருவர். இப்புலவர் பெருமான் இதுதான் தம் அருமை மாணவனைச் சிறப் பித்தற்குரிய ஏற்ற தருணம் என்று அவனது செங் கோற் சிறப்பை மிக மிக உயர்த்த வேண்டி, ஆடும் கடைமணி நா அசையாமல் அகிலமெல்லாம் டுேம். குடையில் தரித்த பிரானென்பர் ” என்று பாடிக்கொண்டே வருகையில், இந்தப் புகழ்ச்சி தனக்கு உரியதே என்ருலும், ஆசிரியர் தன்னை அளவு கடந்து புகழ்ந்துவிட்டதாகக் கருதி, உடனே புலவர் அதற்கு மேல் சீரினே எடுப்பதற்கு முன், -கித்தம்ருவம் பாடும் கவிப்பெரு மான்ஒட்டக் கூத்தர் பதாம் புயத்தைச் குடும் குலோத்துங்க சோழன்என் றேஎன்னைச் சொல்லுவரே ’ என்று பாடி முடித்தான் என்ருல், குமார குலோத்துங் கன் தன் ஆசிரியப் பெருந்தகையாரிடத்து எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான் என்பதை நன்கு அறியலாம் அன்ருே இதனைக் கேட்டார் அனே வரும் அரசர் கோமானப் புகழ்ந்து பேசினர். ஒட்டக் கூத்தரது பெருமை மேலும் விளக்கமுற்றது. இவருக் குச் சீரும் சிறப்பும் பேறும் புகழும் உயரலாயின. இவன் மீதும் ஓர் உலா பாடினர். இவன்மீது உலா பாடியதோடு கில்லாமல், ஒரு பிள்ளைத் தமிழ் நூலேயும் பாடினதாகத் தெரிகிறது. மேலே குறிப்பிடப்பட்ட மூவர்மீது பாடிய மூன்று உலாக்கள் அடங்கிய நூலே இப்பொழுது மூவருலா என்று நிலவி வருகிறது.