பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூச்சர் 35 புலவர் ஏறு மன்னனது அவையினே அலங்கரித்தா ரேனும் அவ்வப்பொழுது வெளியிடங்களுக்கும் சென்று வருவது வழக்கம். அங்ஙனம் சென்று வருங் கால் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த திரிபுவனம் என் லும் ஊருக்குச் சென்றிருந்தார். அங்குச் சோமன் என்னும் பெயரிய செல்வர் இல்லத்தில் கல்விருந்தின ராய்ச் சில நாள் தங்கி இருந்தார். புலவர் சிகாமணியார், வருகை உணர்ந்த செங்குந்த மரபினர் இவரைக்கண்டு வணங்கச் சென்றனர். புலவரும் செங்குந்த இனத்தவர் ஆதலின், இவரைக் கொண்டு தம் குலப்பெருமை. உணர்த்தும் நூல் ஒன்றைப் பெறவிரும்பினர். அவ்வள வுக்கு இனப்பற்று அச் செங்குந்த மரபினர்க்கு இருந்தது. ஆகவே, அவர்கள் தமிழ்ச்சுவை நன்கு பொருந்திய நூல் ஒன்றைத் தம் குலப்பெருமை விளங் கப் பாடுமாறு வேண்டினர். ஆல்ை, இனத்தவர்கட்கு இருந்த அந்த இனப்பற்று, ஒட்டக் கூத்தருக்கு இல்லே. ஆகவே, அவர் அத்தகைய துலேப் பாடிக் க்ொடுக்க மறுத்துவிட்டார். மேலும், அவர்களே நோக்கி, நம் குலப் பெருமையினை நாமே பாடிச் சிறப்பித்துக் கொள்ளுதல் பெருமை தராது. கம்மைப்பற்றிப் பிறர் புகழவேண்டும்; பாடவேண்டும். நம்மை நாமே புகழ்ந்து கொள்ளுதல், நீரை வார்த்து விளக்கை எரி விப்பது போன்றது” என்று கூறிஞர். ஆளுல், செங்குந்த மரபினர் கூத்தரது வார்த்தைகளைக் கேட்டி லர். மூர்க்கனும் முதலேயும் கொண்டது விடா: அன்ருே ஆகவே, அவரை மேலும் மேலும் தொந்தரவு செய்தனர். இந்தத் டு தாந்தரவைப் பொறிக்க முடியா மல் சோமன் என்பானிடம் விடைபெற்றுக் கொண்டு திருவிடிை மருதாரை யடைந்தனர். அங்கேயும் 蓝 மரபினர் இவரை விட்டபாடு இல்லை. இவர் திருக்