பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$莓 தமிழ்ப் புலவர் அதுவர் கோயில்புகுந்து இறைவனே வணங்கித் திரும்பும்போது, இவரை மீண்டும் தொந்தரவு கொடுத்தனர். எப் படியோ தப்பி மீண்டும் கிரிபுவனம் வந்து சோமன் இல்லம் புகுந்து 'என் மரபினரான செங்குந்தர் என்ன, நெருங்கி அடிக்கவும் கள்ளவும், ஓர் இடத்தில் சேர்த்து அடைக்கவும் முயல்கின்றனர். ஆக நான் இனி வெளியேறேன்” என்ற பொருள் அடக்கி ஒரு பாடல் பாடி உள்ளேயே இருந்தனர். வெளியே இருந்த செங் குந்த மரபினர், புலவர்க்கு உண்டியும் உறையுளும் சந்து உதவும் வள்ளலிடம் தம்கருத்தைக் கூறினால், ஒருவேனே நிறைவேறும் என்று கருதி, சோமன் என்னும் வள்ள விடம், தம் மரபாகிய செங்குந்த மரபின் சீரும் பேரும், சிறக்க ஒரு நூலேத் தமிழ்ப்பாவால் புலவர்பெருமானப் பாடிக் கொடுக்கச் செய்யுமாறு வேண்டி கின்றனர். சோமன் என்னும் வள்ளலும் கூத்தர்குது.ாகலமாக இருக் கும் சமயம் பார்த்து, செங்குந்தரது குலாபிமானத்தை எடுத்துக் கூறி ஒரு நூல் பாடியருளுமாறு வேண்டினர். ஒட்டக் கூத்தர் அப்பொழுது யாதும் கூறிலர். தம்மை ஆதரிக்கும் வள்ளலே கூறும்போது, தாம் பாடாதிருத் தல் முறையன்று என்று கருதினர். இயல்வது கரவேல்' என்பதுதான் கம் மூதாட்டியார் அருமை மொழி யாயிற்றே. ஆகவே, புலவர் சிகாமணியார் செங்குந்த மரபினரின் பெயர்க்கே காரணமான ஈட்டியினைப்பற்றி எழுபது பாடல்களைப் பாடினர். அப்பாடல்கள் அடங்கிய நூலே ஈட்டி எழுபது என்பது. இந்நூலில் செங்குந்த மரபின் தோற்றம், வளர்ச்சி, அருமை, பெருமை, வீரம் முதலியன நன்கு சிறப்பித்துக் கூதம் பட்டுள்ளன. இந் நூல் ஒட்டக் கூத்தருடைய வாயால் பாடப்பட்டதல்ை இதன் தமிழ்ச் சுவை