பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ்ப் புலவர் அறுவர் ஞர். பாண்டியன் விளையாட்டாகப் புன்னகைபூத்துப் 'புலவர் ஏறே, எம் குலத்து மகளே மணந்து கொள்ளச் சோழ மன்னர்க்கு என்ன தகுதியுள்ளது?’ என்று வின வினன். ஒட்டக் கூத்தர் பஞ்சவன் கேட்ட வின, வேடிக் கைவின என்று அறியாதவராய்ச் சோழர் குடியினேப் பாண்டியர் குடியை நோக்கத் தாழ்வுடையது என்னும் கருத்தில் பாண்டியன் கூறினன் என்று கருதி, உடனே வீறு கொண்டு, 'அரசர் ஏறே, சோழரது பட்டத்துக் குதிரையாகிய கோரத்துக்குச் சமமாக உமது பட்டத்துப் பரியாகிய கனவட்டம் நிகராகுமா? கங்கையில் புனி தமாகிய காவிரியாற்றிற்கு ஒப்பாக உமது காட்டு வைகையாற்றின நிகராக்க ஒண்னுமா ? சிவனர் விரும்பும் எம் குல மாலேயாகிய ஆத்தி மாலைக்கு ஒப் பாக உமது கைப்புக் குணம் மாருத வேப்பமாலை நிகர் எனக் கூற முடியுமோ? எம் குல மூல காரணனை சூரியனுக்கு நேராக உம் குல மூல காரணனை சந்தி ரன் எதிர் நிற்க இயலுமோ? எங்கள் புலிக்கொடிக்கு நிகராக உங்கள் மீன் கொடி கிகர் எனக் கூறுவீரோ? 'ஊரெனப்படுவது உறையூர் என்று எம் போன்ற புல வர்கள் சிறப்பிக்கும் உறையூருக்கு நிகர், உமது கொற் கையம் பதியோ? இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து சோழர் குடி உயர்ந்ததா ? அன்றிப் பாண்டியர் குடி உயர்ந்ததா? என்பதை நீரே தெளிமின்” என்று எடுத் துக் காட்டினர். பாண்டியனது.அவைக் களத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த புகழேந்தியார் ஒட்டக் கூத்தர் கூறிய கூற்றுக்களுக்கு எதிர்மாற்றம் கூறலுற்ருர். புலவீர், நீர் கூறுவனவும் உண்மையே. ஆனால், யான் இதுபோது கூறுவனவற்றையும் சிறிது செவி சாய்த்துக்கேண்மின்: