பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூத்தர் 33 அகத்தியனர் தமிழ் அறிந்தது தும் காட்டகத்துள்ள நேரிமலையிலா? அன்றி எம் பாண்டி காட்டகத்துள்ள பொதிகை மலேயினிலா? சிவபெருமான் செய்த திரு விளையாடல்கள் உறந்தையில் நடந்தனவா? அன்றி மதுரையிலே கடந்தனவா? திருமால் எடுத்த பத்துப் பிறப்புக்களில் புவிப் பிறப்பு உண்டா? அன்றி மீன் பிறப்புண்டா? திருஞான சம்பந்தர் எழுதி விட்ட ஏடு எதிர்த்து வந்தது வைகையாற்றிலா அன்றிக்காவிரி கதி யிலா? பேயை ஒட்டப் பயன் தருவது வேம்பா? அன்றி ஆத்தியா? கடல் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் என்னும் பெயர் பெறுமாறு கடல் பணிந்தது, எம் பாண்டிய குலத்தவனேயா? அன்றி உம் சோழ மரபின ரில் எவரையேனும் ஒருவரையா? இந்தக் குறிப்புக்களே அறிவீராயின் பாண்டியர் குலமும் பாண்டிய நாடும் சோழர் குலத்தினும் சோழ நாட்டினும் சிறந்தவை என்பன தெரியவில்லையா?' என்று உடனே பதிலுரை பகர்ந்தார். பாண்டியன் இவ்விரு புலவர்களும் இங் வனம் தம்தம் கல்வியறிவு தோன்ற உரையாடியதைக் கேட்டு மகிழ்ந்து, இவ்வாய்ச் சண்டை முற்ருதிருக்கத் தடுத்துத் தன் மகளைக் குமார குலோத்துங் கனுக்கு மண முடிக்க இசைந்தான். பாண்டி யன் எண்ணத்தின்படியே அவனது சுற்றத்தாரும் வாழ்க்கைத் துணைவியாரும் இசைவுதந்தனர். பாண் டியன் கணியரை அழைத்து கன்னாள் ஒன்றைக் குறிப் பிடுமாறு பணிக்க, அவர்களும் திருமண நாளேக் கணித் துக் கொடுத்தனர். அத்திருமண கன்னுள் குறிக்கப்பட்ட ஒலேயினைப் பெற்று ஒட்டக் கூத்தர் சோழ நாட்டை நோக்கிப் புறப்பட்டார். குலோத்துங்கனக் கண்டு மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை முதலில் இருந்து