பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ்ப் புலவர் அறுவர் இறுதிவரை எடுத்து மொழிந்தார். மன்னன் அவற் றைக் கேட்டுத் தம் ஆசிரியப் பெருந்தகையாரது ஆற். றலேப் புகழ்ந்து கொண்டாடினன். குலோத்துங்கனுக்கும் பாண்டியன் திருமகளுக் கும் குறித்த நாளில் திருமணம் நடந்தேறியது. திரு மணம் மணமகள் இல்லத்திலேயே கடந்தது. குமார குலோத்துங்கனும் பன்னுள் தன் மாமனர் அரண்மனை யில் திங்கிப் பெருவிருந்து அயின்று வந்தான். பின்பு பாண்டியர் பெருமானிடம் விடை பெற்றுத் தன் காட் டிற்குப் புறப்பட ஆயத்தமானன். பாண்டிய மன்னன் தன் தகுதிக் கேற்பத் தன் மருகளுனகுமார குலோத்துங் கனுக்கு வேண்டிய அளவுக்கு ரீதனமாகப் பல பொருள் ஈந்தான். தான் அருமையாக வளர்த்த திருமக ளுக்குத் தன்னைப் போல இருந்து அன்புரை கூறும் பொருட்டுத் தன் அவைக்களப் புலவராகிய புகழேந்தி யாரையும் உடன் அனுப்பினன். அவர் மேலும் அர சனது திருமகளுக்கு அருந்தமிழை அறிவுறுத்திய ஆசிரியர் ஆதலால், உடன் போதலும் முறையே ஆயிற்று. மணமகனும் மணமகளும் மற்றும் உள்ள ரும் சோழ நாடு புக்கனர். மன்னனும் தேவியும் அன் புற்று இன்புற்று வாழிலாளுர். ஒட்டக் கூத்த்ர், புகழேந்திப் புலவர் தம்மை ஒரு பெரிய சபையில் எதிர்த்துப் பேசியதால், அவர் சோழ காடு புகுந்ததும் அரசனிடம் கூறி அவரைச் சிறையில் அடைத்தனர். புகழேந்தியார் தாம் சிறையில் இருந்த போது அங்கு அடைப்பட்டிருந்தவர்கட்குத் தமிழ் கற்பித்து ஒட்டக் கூத்தரது கல்விச் செருக்கை அடக்கி னர். இந்தப் பகை நீடியாதிருக்கச் சோழமாதேவியார்