பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூத்தர் 肇量 தமது யுக்தியினல் புகழேந்தியாரை விடுதலே செய்தனர். அதன் பின் இருவரும் தம்முள் பகை ஒழிந்து இன் புற்று அன்புற்று வாழலாயினர். கூத்தர் காலம் கூத்தரது காலத்தையும் அறிவோமாக. கூத்தர் வயதால் மிக மிக முதியவர். ஆண்டு பல உயிரோடு வாழ்ந்தவர், இல்லையானல் விக்கிரம சோழன் காலத்தி லும், அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும், அவ னுடைய மகன் குமார குலோத்துங்கன் காலத்திலும் அவர் இருந்ததாக நிலவும் கதை பொய்யாகிவிடும். ஒட்டக் கூத்தர் காலத்தில் கம்பர் இருந்ததாகக் கூறப் படுகிறது. கம்பரது காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற் ருண்டு என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்பட் டிருப்பதால் ஒட்டக் கூத்தர் கம்பர் காலமாகிய கி. பி. டன்னிரண்டாம் நூற்ருண்டிலும் அவருக்கு முன்பும் விக்கிரம சோழன் காலத்தவராகச் சொல்லப்படுவதால் கி. பி. 11-ஆம் நூற்ருண்டிலும் இருந்தவர் என்று கொள்வோமாக.