பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சேக்கிழார் சேக்கிழார் தோற்றம் தமிழ் நாட்டில் மிகச் சிறந்து விளங்கிய நாடுகள் மூன்று. அவை சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு எனப்படும். அங்நாடுகட்கு ஈடாகத் தொண்டைகாடும் பெருமைபெற்று இருந்தது. பாலாறு என்னும் ஆற்று வளத்தால் அந்த நாடு பலவிதத்திலும் உயர்ந்து விளங்கியது. இத்தகைய நீர்வளம் நிலவளம் மிகுந்த தொண்டை காட்டில் இருபத்து நான்கு கோட்டங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று புலியூர்க் கோட்டம் என்பது. கோட் டங்களினுள்ளே பல ஊர்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று குன்றத்துனர் என்பது. அதனே இப்போது குண்ணத்துார் என்று கூறி வருகிருர்கள். இது சென்னையிலிருந்து பதினுன்கு கல் துரத்தில் உள்ள ஒரு கிராமம். இந்தக் கிராமத்தில் பல குடிகள் வாழ்ந்து வந்தனர். அவற்றுள் சேக்கிழார் குடியும் ஒன்று. சைவ உலகமும் தமிழ்காட்டுமக்களும் செய்த புண்ணியத்தின் பயனுகச் சேக்கிழார் என்னும் திருத்தொண்டர் பிறந் தார். அவருக்கு இளேய சகோதரர் ஒருவருண்டு. அவர் பெயர் பாலருவாயர் என்பது. சேக்கிழாருக்கு அருண் மொழித்தேவர் என்று மற்ருெரு பெயர் இருப்பினும், அவர் எல்லோராலும் சேக்கிழார் என்ற குடிப் பெயரா லேயே கூறப்பட்டுவந்தார்.