பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 43 வேளாண் குடிச் சிறப்பு சேக்கிழார் குடி உழுதுண்டு வாழும் ஒப்பிலாத வேளாளர் குடியாகும். வேளாளர் சொல் தவருதவர்கள்; நீதி வழுவாதவர்கள்; நல்ல குடியினர் என்று எல்லோரா லும் போற்றப்பட்டவர்கள். சொல் உறுதி உள்ளவர் கள். இதற்குப் பழயனூர் நீலியின் சதியால் வணி கன் இறக்க, அதன் சிமித்தம் எழுபது வேளாண்குடி மக்களும் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பதே போதிய சாட்சியாகும். ஏர் பிடிக்கும் கைதான் செங் கோல் பிடிக்கும் என்ற எண்ணத்தால் எங்கும் ஏர் வளம் திகழச் செய்தவர்கள். சைவ நாயன்மார்கள் அறு பத்து மூவருள் வாயிலார், சத்தியார், விறல் மண்டர், திருநாவுக்கரசர், சாக்கியர், கோட்புலியார், மன்னக் கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், இளேயான் குடி மாறர், மூர்க்கர், அரிவாள் தாயனர், செருத்துணை யார், முனையடுவார், ஆகிய பதின்மூன்று பேர்களும் வேளாண் குடி மக்கள். இக்குடி மக்கள் வரும் விருக் தினரை உபசரிப்பதில்பேர் போனவர்கள். வேளாண்மை என்னும் சொல்லுக்குப் பொருளாகப்பிறர்க்கு உபகாரம் செய்வது என்னும் குணத்தை, இவர்கள் தம்குல ஒழுக்க மாகக் கொண்டதனால் வேளாளர் என்று அமைக்கப் பெற்ற பெருமை நிறைந்தவர் என்முலும் பொருந்தும். திருநாகேஸ்வரம் எடுப்பித்தல் இந்த வேளாண் குடியில் தோன்றிய சேக்கிழார் பெருமான் கல்வி கேள்விகளில் நிகரற்றவராய் அகத் திங்ம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சைவத் திருமுறைகள் முதலிய இலக்கிய நூல்களேச் சந்தேக