பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழ்ப் புலவர் அ.அவர் மறக் கற்று உணர்ந்திருந்தார். அருண்மொழித் தேவ ரான சேக்கிழார் பெருமான் சைவவேளாளர் குலத்தினர் ஆனதால், இறைவனுகிய சிவபெருமானிடத்தில் மாருத அன்பு கொண்டிருந்தார். சிவபெருமானிடம் அன்புகொண்டது போல் அவருள்ளம் சிவனடியார் களிடமும் அளவில்லா அன்பு கொண்டிருந்தது. முன் ைேர்கள் தமது உள்ளத்தை ஒரு மனப்படுத்துவதற் குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து அதைத் தமது ஆத்மார்த்த இருக்கோவிலாகக் கொள்ளுதல் வழக்கம். அது போலவே சேக்கிழாரும் சோழநாட்டுத் திருப்பதிகளிலொன்ருன திருநாகேஸ்வரம் என்ற கோவிலின்பால் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டி ருந்தார். ஆகவே, தமது ஊருக்கு அருகில் வடமேற் கில் ஒரு திருத்தலத்தை அமைத்து, அதற்குத் திருநாகேச் சரம் என்று திரு நாமம் குட்டி அங்கு ஆண்டவனேப் பூசித்துவந்தார். இன்றும் குன்றத்துாரில் இத்தலத்தை அனைவரும் கண்டு வணங்கலாம். சேக்கிழார் பெருமான் இகத்திற்குரிய தம் குலத்தொழிலே நல்ல முறையில் நடத்தியும் பரத்திற்குரிய பரமன் பாத பூசையையும் பண்புடன் இயற்றியும் வரலாயினர். சோழன் ஆராய்ச்சி சேக்கிழார் பெருமான் குன்றத்துசரில் தம் இக பரத்திற்குரிய கடன்களைச் செய்து கொண்டு வருகை யில், சோழ நாட்டை.அரசாண்டு வந்தவன் இரண்டாம் குலோத்துங்கன். இவன் கி. பி. 12-ஆம் நூற்ருண்டு முற்பகுதியில் அரசு புரிந்த மன்னனாவான். இவனுக்கு அனபாயன் என்ற பெயரும் உண்டு. கல்வி கேள்விகளில் இவன் மிகவும் வல்லவன். தனக்கு முன்னிருந்த புலவர்