பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 47 ஆனந்தம் கொண்டான். அவற்றைத் தன் சபையை அலங்கரிக்கும் புலவர்களுக்கும் படித்துக் காண்பிக் தான். அங்குள்ள அறிஞர் யாவரும், “ அவ்விடை மிகவும் பொருத்தமானதே. தொண்டைகாடு சான்ருே ருடைத்து என்பதில் சிறிதும் சந்தேகமில்லே ' என்று கூறி மகிழ்ந்தனர். அரசன், “ இந்த துண்ணறிவு உடையவரைத் தன்னுடைய அரசாட்சியில் மந்திரியாக அமர்த்தினுல் நாடு நலம்பெறும். அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும் என்று முன்னேர்கள் மொழிந்துள்ளனர் ” என்று எண்ணி இவ்விடைகளே எழுதி அனுப்பிய அறிஞரை அங்கு அனுப்புமாறு மறுபடியும் ஒரு திருமுகம் தொண்டை நாட்டிற்கு அனுப்பின்ை. அதுகண்ட தொண்டை நாட்டரசன் சேக் கிழாரைச் சோழ மண்டலத்திற்கு அனுப்பி வைத் தான். சோழ மன்னன் அருண்மொழித் தேவரை அதிக அன்புடனும் நன்மதிப்புடனும் வரவேற்றுபசரித்துத் தனது அரசியலில் முதல் மந்திரிப் பதவியை அவருக் களித்து, உத்தம சோழப் பல்லவர் என்ற பட்டமும் அளித்துப் பெருமை பெற்ருன். சேக்கிழாரும் தமக் கரசல்ை அளிக்கப்பட்ட மந்திரிப் பதவியை ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் அரசை நடத்திவரலாயினர். அமைச்சர் இயல்பெனத் திருவள்ளுவர் வகுத்துக் கூறிய சொல் வன்மை, வினைத்துய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, தூது, மன்னனைச் சேர்ந்து ஒழுகல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை முதலிய பண்பாடுகளே அனுசரித்துத் தம் கடமைகளை ஆற்றி வரலார்ை.