பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ்ப் புலவர் அ.அவர் சேக்கிழாரைப் புராணம் பாட வேண்டல் குலோத்துங்க மன்னன் அறிவு ஆராய்ச்சியில் அதிக ஆவலுள்ளவன் என்பது முன்பே கூறப்பட்டுள் ளது. ஆகவே, தன் சபையில் நல்ல அறிஞரைக் கொண்டு கற்கவிகள் பலவற்றிற்குப் பொருள் விளக்கம் கூறுமாறு கேட்டுவந்தான். சபையறிஞர் விளக்கம் கூறுவதைச் சேக்கிழாரும் கேட்டுவந்தார். இப்படிக் கேட்டு வருகையில் உத்தம சோழப் பல்லவருக்குத் தாமும் சிலவற்றிற்குப் பொருள் கூறவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. இதனை அரசனிடம் தெரிவித் தார். அரசனும் அவர் விருப்பத்திற்கு உடன்பட்டு அவ்வாறே கூறுமாறு வேண்டினன். அருண்மொழித்தேவர் அரிய செயல்களைச் செய்து பெரியார்கள் எனப் பேர் பெற்ற சிவனடியார்கள் வரலாறுகளேச் சொல்ல ஆரம்பித்தார். அனபாயன் அன்புடன் அடியார்களின் வரலாறு களைத் தினந்தினமும் கேட்டு அவ்வரலாற்றில் மனத் தைப் பறிகொடுத்தான். 'எப்பொழுது பொழுது விடி யும்? இன்று யாருடைய வரலாறு கூறப்போகி ருரோ ?” என்று தாகமெடுத்துத் தவித்தவன் தண் னிரைக் காண எப்படி ஆவலோடு இருப்பானே, அது போலச் சிவனடியார் கதைகளே அதி ஆர்வமோடு.செவி கொடுத்துக் கேட்க ஆவலோடு இருந்தனன். சேக்கிழா ரும் தொடர்ந்து தனியடியார்களான சிவனடியார்கள் அறுபத்து மூவர் வரலாறுகளையும், தொகை அடியார்க அான ஒன்பது தொகையடியார்களின் வரலாறுகளை யும் சொல்லி முடித்தார். சோழன் புலவர் பெருமான் நோக்கி, 'ஐயா, நீங்கள் சொன்னவைகள் இம்மைக் கும் மறுமைக்கும் பலன் அளிப்பவைகளாக உள்ளன.