பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 4% இந்த வரலாறுகளுக்குள்ள உண்மைகளேத் தாங்கள் எப்படி அறிந்திர்கள்? அதையும் அன்புடன் அறிவிக்க வேண்டும்' என்று அரசன் வேண்ட, அருண்மொழித் தேவர், “அரசே, சைவ சமய ஆசிரியர் கால்வருள் ஒருவரான தம்பிரான் தோழராம் ஆளுடைய கம்பிகள் தமது தேவாரமாகிய திருப்பாடலில் 'தில்ல்ே வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற ஆரம்பத்தினையுடைய பதிைெரு பாட்டுக்கள் அடங்கிய பதிகம் ஒன்றை அருளிச்செய்தார். அதுதான் திருத் தொண்டத் தொகை என்று கூறப்படுவது. இந்தப் பதிகத்தைச் சிறிது வகைப்படுத்தித் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண் டார் நம்பி என்ற பெரியார் திருத்தொண்டர் திரு வந்தாதி என்ற பெயரோடு ஒரு நூலேப் பாடி உள்ளார். இவையே அன்றி இவர்கள் வரலாற்றைத் தெரி வதற்குச் சைவத்திருமுறைகளும் துணைசெய்கின்றன’’ என்று அன்பும் அறிவும் துலங்க அறிவித்தார். அருண் மொழியார் கூறியதைக் கேட்ட அரசன் அன்பு மேலிடப்பட்டு, 'அமைச்சரே, இந்த வரலாறுகளை நீங்கள் கூற, இங்குள்ள அனேவரும் கேட்டு இன்புற் ருேம். இத்துடன் இவை மறைந்து போகக்கூடாது. ஆதலால், இந்த வரலாறுகளே நவரசங்களும் ஒன்று திரண்ட காவியமாகப் பாடி அருளவேண்டுகிறேன்: என்று கேட்டுக்கொள்ளச் சேக்கிழாரும் அதற்கு இணங்கினர். சேக்கிழார் தில்லையை அடைந்து புராணத்தைப் பாடுதல் உததமச் சோழப் பல்லவர் அனபாயனிடம் விடை பெற்றுச் சிதம்பரத்தை அடைந்தனர். அரசர் 4.