பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 5 i. முதல் இடை கடை என்ற மூன்று இடங்களிலும் வைக் துப் போற்ற வேண்டும் என்பதற்காக இறைவனுல் அளிக்கப்பட்ட பல்லக்கில் திருஞானசம்பந்தர் ஏறும் பொழுது இடையில் இந்தத் தொடரை வைத்தே பாட் டமைத்தார். புராணத்தைப்பாடி முடிக்கையிலும் முடி வில் இந்தத் தொடரையே அமைத்துப் பாடி முடித்தார். நூல் அரங்கேற்றமும் ஊர்வலமும் ஒரு வருடத்தில் புராணம் முடிந்தது. ஆனடா பன் அதைக் கேள்விப்பட்டதும் தனது பரிவாரங்க ளோடு சிதம்பரத்தை அடைந்து சேக்கிழாரைக் கண் டான். சேக்கிழாரின் திவ்வியமங்கள சிவ வேடத் தோற்றத்தைக் கண்ட அரசன், தான் மன்னன் என் பதையும் புலவர் தனது மக்திரி என்பதையும் அறவே மறந்து சிரமேல் இரு கரங்களையும் கூப்பி வணங்கினன். மேலும், அந்த நூலுக்குச் சேக்கிழாராலேயே பொருள் கூறப்பட வேண்டுமென அரசன் புலவரைப் பொருள் விரித்துக் கூறுமாறு வேண்டினுன் அருண்மொழி யாரும் அதற்குடன்பட்டு அந்தப் பாடல்களுக்கு இலக்கிய இலக்கண உதாரணங்களே மேற்கோள்காட்டி விரிவாகப் பொருள் கூறி வந்தார். புராணப் பிரசங்கம் ஒரு வருடத்தில் முடிவுபெற்றது. இந்த ஒர் ஆண்டும் சிதம்பரத்திற்கு எத்திசையில் இருந்தும் அன்பர்களும் பொதுமக்களும் வந்து கூடினர்கள். புராணச் செர் ற் பெர்ழிவாகிய புனித உரை ஒவ்வொருவர் இதயத்திலும் இடம்பெற்ற்து. வெளியூர்களில் இருந்து வரும் அன்பர் களுக்கு வேண்டிய வசதியும் உதவியும் அனபாய மன்னன் ஏற்பாடு செய்திருந்தான். புராணத்தைக் கேட்டவர்கள், புலவர் பெருமான் சேக்கிழாரைப் பெரிதும் பாரட்டிப் பேசிப் புகழ்ந்தனர்.