பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? தமிழ்ப் புலவர் அறுவர் 'நீலக்கடலேயும் ந்ேதிக் கரை சேரலாம். வானத்து விண் மீன்களே வரிசையாய் எண்ணிவிடலாம். கடற்கரை மன லேக் கணக்கிட்டுக் கூறலாம். ஆழியின் மீன்களே அளவெடுத்துரைக்கலாம். ஆனால், சிவனடியார்களின் வரலாற்றைச் செப்புதல் அரிதினும் அரிது. அதைச் சொல்ல வல்லவர் சேக்கிழார் அன்றி மற்றெவராலும் முடியாது' என்று புகழ்ந்து கூறினர். சிலர் 'மதுர கவிகளில் ராமாயணத்தை எழுதிய வான்மீக முனிவரும் இவருக்கு ஈடு ஆவரோ என்றனர். மற்றும் சிலர், 'ஐந்தாம் வேதம் என்று அவனியில் கூறப்படும் மகா பாரதத்தைப் பாடிய வேத வியாச முனிவரும் இவருக் கொப்பாவரோ?” என்று கூறினர் 'வடமொழி இலக் கனமாகிய வியாகர்ணத்தை எழுதிய பதஞ்சலி முனி வரும் நிகராவரோ என்றனர். சிலர் முத்தமிழ் மொழிந்த உத்தம முனிவராம் அகத்திய முனிவரும் உவம்ை கூறுதற்கு உரியவர் ஆக மாட்டார்” என்று மொழிந்தன ர். சிலர் வெண்டாமரையில் விளங்கும் கலே மகளும் தன் உறைவிடமாகிய தாமரையை மறந்து சங்கப் புலவர் காவிலிருந்து நீங்கித் தன் காகளும் நான் முகன் நாவைவிட்டு விலகிச் சேக்கிழார் காவினில் சேர்ந்து விட்டனள். அகளுல்தான் இவர் இவ்வாறு இனிமையாகப் பா டிஞர்' என்று கூறிக் குதுகலம் கொண்டனர். இங்கனம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித மாகப் புலவர் திலகரைப் புகழ்ந்து போற்றினர்கள். இத்தகைய சிறப்பிற்குக் காரணரான சேக்கிழார் பெரும்ானேயும் அவர் அருளிச் செய்த திருத்தொண் டர் புராணத்தையும் ஆனேயின் மீது அமர்த்தி ஊர் வலம் நடத்த உள்ளங் கொண்டான் அரசன். அரசன் எண்ணப்படியே புலவரையும் அவர் இயற்றிய புரா னத்தையும் சைவத் திருமுறைகள் பதினென்றையும்