பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ்ப் புலவர் அறுவர் லாக கம்பியாண்டார்பிரபந்தங்கள் ஈருக உள்ள பாடல் கள் பதினேராம் திருமுறையாகவும், பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகவும் சைவத் திரு முறைகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. முறை என்பது ஒழுங்கு. இலக்கண இலக்கிய ஒழுங்குகள் அமைந்த நூல்களே முறை என்று நமது முன்னேர்கள் மொழிந்து வந்தனர். இங்குக் கூறப் பட்டுள்ள நூல்களாகிய முறைகள் இறைவனின் புகழ் களையும் அடியார்களின் அன்பையும் ஒழுங்காகச் சொல்லியிருக்கின்றமையால் இவற்றிற்கு முன் திரு என் னும் அடை கொடுக்கப்பட்டுத் திருமுறைகள் என்று சொல்லப்படுகின்றது. திரு என்னும் சொல் சிறப்பு, அழகு, கண்டோர் விரும்பும் தன்மை எனப் பல பொருள்களைக் கொண்டிருப்பதனால் திரு முறைகள் பன்னிரண்டும் அழகுடையனவாயும் சிறப்புடையன வாயும் அனைவரும் விரும்பும் கிகரிலாதனவாயும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் திருமுறைகள் பன்னிரண்டும் ஓம் என்னும் ஒர் எழுத்து ஒரு மந்திர மாகிய பிரணவ மந்திரமாகத் திகழ வல்லன. இந்த உண்மையினே இந்தத் திருமுறைகள் அமைந்திருக்கும் ஒழுங்கு முறையிலிருந்தே நன்குதெரிந்து கொள்ளலாம். முதல் முறையின் முதல் பாட்டானது தோடுடைய செவியன், என்று தொடங்கப் பட்டுப் பன்னிரண்டாம் திருமுறையின் சற்றுப் பாட உ உலகெலாம்' என்று முடிதலின், தோ, என்னும் எழுத்தில் உள்ள ஒ என்னும் எழுத்தும் உலகெலாம் என்னும் சீரின் ஈற்றி லுள்ள ம் என்னும் எழுத்தும் சேர்ந்தபோது ஒம் என்று ஆவதை அறிந்து இந்த உண்மையை உணர்க. ஆகவே, இத்திருமுறைகள் பிரணவம்தான் என்பதற்குச் சக்