பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 55 தேகமே யில்க் யல்லவா? இந்தச் சிறந்த பொருள் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்ட பின்புதான் வெளிப்படலாயிற்து. அவ் விளக்கம் கேட்ட அனபாயன் தான் செய்த அரிய செய் கைக்கு மனம் மிக மகிழ்ந்தான். தொண்டர் சீர் பரவுவார்க்கு மேலும் பல பரிசு கள் கொடுத்துப் பரவசமடைந்தான். சேக்கிழார் பெரு மானும் சிதம்பரத்தில் வாழ்ந்து அம்பலத்தாடினர் அடி வணங்கி வாழ்ந்து வரலாயினர். சேக்கிழார் பெருமையும் நூலின் சிறப்பும் சேக்கிழார் பெருமான் புலவர் வரிசையில் வைத்துப் போற்றக்கூடிய பெருமை வாய்ந்தவர். எப்படித் திரு வள்ளுவர் தெய்வப் புலவர் என்று எவராலும் கூறும் பேறு பெற்றனரோ, அப்படியே இவரும் தெய்வப் புலவர் சேக்கிழார்' என்ற சிறப்பு நாமம் பெற்றவர். சேக்கிழார் அால் ஆசிரியர் மட்டுமல்லர். அவர் ஒரு சிறந்த போதகாசிரியராகவும் ஞானுசிரியராகவும் உரையாசிரியராகவும் திகழ்ந்தார். அடியார்களின் வரலாறுகளே விரிவாகப் பாடியிருப்பதனால் நால் ஆசிரியராகின்ருர். பரசமயப் படுகுழியில் படாத படி பல பக்திப் பாடல்களைப் பாடிப் போதித் திருப்பதனுல் போதகாசிரியராய்ப் புகழ்பெற்ருள். ஆண்டவனே அடையும் அரிய மார்க்கத்தைப் பல செய்யுட்களில் செப்பியிருப்பதால் ஞான ஆசிரியர் என்று நாட்டில் நவிலப் பெறுகின்ருர். பதிகங் கள் பலவற்றிற்குப் பொருள் விளக்கம் செய்திருப்ப தால் உரையாசிரியர் என்று உலகில் உரைக்கப்படுகின் முர். இவரை வடநாற்கடலும் தென் நாற்கடலும் கிலே கண்டுணர்ந்த சிவஞான முனிவர், “எங்கள் பாக்கியப்