பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ்ப் புலவர் அறுவர் பயனுய்ப் பதி குன்றை வாழ் சேக்கிழானடி சென்னி யிருத்துவாம்” என்றும், குன்றைநகர்க் குலக் கவியே வல்லான் அல்லால் கருத் தொண்டர் எம்போல் வார் எவ்வாறு தெரிந்துரைப்பர்?’ எனத் தம் வாயார மனமாரப் புகழ்கின்ருர் மகா வித்துவான் திரிசிபுரம் மீளுட்சி சுந்திரம் பிள்ளையவர்கள். 'கல்லும் கரையக் கவிபாடும் கனிவாய்” என்றும் "முதிரும் அருட்கவி பாடிய புலவன்’ என்றும் பக்திச் சுவை கணி சொட்டச் சொட்டக் கவிடாடிய வலவ” என்றும் பாடிப் பரவசமுற்ருர். தமிழில் தலே சிறந்து விளங்கிய நூல்கள் இன்னவை என்று எடுத்துக் கூற வந்த கொற்றவங்குடி உமாபதி சிவாசாரியார், சேக் கிழார் பெருமான் பாடிய பெரிய புராணத்தையும் சேர்த்து உரைத்ததனுல் இந்த நாலாசிரியரின் புகழும் மால் பெருமையும் ஒன்கு விளங்குகின்றன அல்லவா? அருண்மொழித் தேவராம் சேக்கிழார் பெருமை தமிழ் நாடெங்கும் பிரகாசிக்கின்றது. "வள்ளுவர் செய்குறளும் வாசகம்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒள்ளியசீர் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாக் தரம்” என்பர் கொற்றவங் குடியார் சேக்கிழார் பெருமா னின் பொருள் மிகுந்த பாடல்களைப் படித்துப் இன்புறு வது அனேவரின் கடமையாகும். இவரது காலம் இரண்டாம் குலோத்துங்களும் அன பாயன் காலமாகிய கி. பி. 13-ஆம் நாற்ருண்டின் முதற் பகுதி எனக் கொள்க. இதன் விரிவை மேலும் கான விரும்புவோர், கோவை. சுப்பிரமணிய முதலியார் எழுதிய சேக்கிழார் என்னும் நாலில் கண்டு அறிவாராக,