பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ்ப் புலவர் அறுவர் கங்கள் இருப்பதைக் காணலாம். வீடு கட்ட கடைக் கால் தோண்டினுலும் பூமியில் புதையுண்டு கிடந்த சிலேகளையும் சிவலிங்கங்களையும் எடுக்கலாம். இத் தகைய பெருமை நிறைந்த நகரை நம் வாழ்நாளில் ஒரு முறையாயினும் பார்த்து விடுதல் சிறப்புடையதாகும். இவ்விடத்தில் பல சிற். ஒவியங்களின் பெருமையைக் கண்டுகள்க்கலாம். அசோகர் காலத்தில் கடப்பட்ட கல் தம்பங்களையும் காணலாம். அவற்றில் எழுதப்பட்ட பெளத்த மதக் கொள்கைகளின் உண்மைகளையும் உணரலாம். வீதிகள் யாவும் பரந்து காணப்படும். இன்றும் ஜன நெருக்கம் மிகுதியும் உடையதாய் வாணிபத் துறையில் சிறப்புடையதாய் விளங்குகிறது. புடவைகட்குப் பேர்போன இடங்களில் காஞ்சி புரமும் ஒன்று. நெசவுத் தொழிலுக்கும் இது நல்ல பெயர் வாங்கிய இடமாக இருந்ததஞல் 'காஞ்சிபுரத் திற்குச் சென்ருல் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம்” என்னும் பழமொழியும் எழலாயிற்று. இன்னுேரன்ன சிறப்புடைய பதி இக்கச்சியம் பதியாதலின், 'காஞ்சிக் குப் போகாதவர் கழுதை பிறப்பாகப்பிறப்பர்” என்னும் பழமொழியையும்கூடக் கூறத் தொடங்கினர். பிறப்பும் கல்வியும் இத் தகைய சீரும் சிறப்பும் பேரும் புகழும் பெற்ற காஞ்சிபுரத்தில் காளத்தியப்பர் என்னும் பெயரிய அங் தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மறந்தும் பு றங் தொழாச் சைவ சமயத்தவர்; காலே, பகல், மாலே ஆகிய முப்போதும் இை றவனேத் திண்டிப் பூசை முதலியன சிறப்புக்களேச் செய்யும் சிவாலய குருக்கள் மரபினைச் சார்ந்தவராய்த் திகழ்ந்தவர். இங்ஙனம் சைவ ஆகம விதிப்படி சிவபெருமானே முப்.ே தும்