பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§2. தமிழ்ப் புலவர் அறுவர் கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு முருகப் பெரு மான் தம் மாட்டு வைத்த அன்பின் பெருக்கை எண்ணி எண்ணி உள்ளம்களிப்பார். இப்படியே எல் முழுமை யும் இவரால் பாடப்பட்டு முருகப் பெருமானல் திருத்தப்பட்டது. நூல் அரங்கேற்றம் கந்தபுராணம் உற்பத்திகாண்டம், அசுரகாண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களையுடைய தாய், பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்தாறு விருத்தப் பாக்களைக் கொண்டதாய் இனிதில் பாடப்பட்டு முடிந் தது. இந்த நூலே கல்லதொரு நாளில் ஆசிரியரைக் கொண்டே அரங்கேற்றம் செய்விக்க வேண்டுமெனக் கச்சிப்பதியினர்.வேண்டிக்கொண்டனர். குமரகோட்ட த் தில் முருகப்பெருமான்திரு முன்பே இது அரங்கேற்றப் படவேண்டுமென்று தீர்மானித்து அதற்கெனத் தனித் தொரு மண்டபம் அமைக்க ஏற்பாடு செய்தனர். அரங் கேற்ற நாளில் ஊர்ப்பொதுமக்களும், வடமொழி தென் மொழிகளில் பாண்டித்தியம் வாய்ந்த புலவர் சிகாமணி களும் மற்றுமுள்ள ஆண்களும் பெண்களும் திரண்டு கூடினா. கச்சியப்ப சிவாசாரியர் தாம்பாடிய நாலேவாசித்துப் பொருள்கூறத் தொடங்கினர். அப்படித் தொடங்கும் போது, கந்த புராணத்தின் தொடக்கச் செய்யுளாகிய, " திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் ' என்னும் பாடலுக்குப் பொருள் கூறத்தொடங்கி, முருகப் பெரு பாள்ை எடுத்துக் கொடுக்கப்பட்ட திகட சக்கரம் கான் தும் தொடரைத் திகழ் + தசம் + காம் என்று