பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழ்ப் புலவர் அ.அவர் ஆற்ருதவராகிய ஆறு முகப் பெருமான், கச்சியப்பர் கனவில் தோன்றி, ‘அன்பனே, வருந்தாதே, நாளைக் கும் கூட்டத்தில் இந்த முதற் செய்யுளைக் கூறிப் பதச் சேதம் செய்து பொருள் விரிக்கத் தொடங்குக. அப் போதும், சபையில் உள்ளவர் ஆட்சேபனை கூறத் தொடங்கில்ை, அந்த வேளையில், அச்சபையினிடையே ஒரு புலவன் எழுந்து, அதற்கு விடை கூறுவன். அஞ்ச வேண்டா என்று கூறி மறையக் கச்சியப்பர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லே. உடனே எழுந்துகொண் டார். முருகப்பெருமானே வாயாரத் துதித்துப் போற் றினர். பொழுது எப்போது விடியும் விடியும்? என்று காத்துக் கொண்டிருந்தார். பொழுதும் விடிந்தது. காலேக் கடன்களை முடித்துக்கொண்டார். குமரப் பெருமான் ஆலயத்திற்குச் சென்ருர், கோவில் வேலை களையும் செய்து முடித்துப் பின் தாலும் கையுமாகக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார். - - கூட்டம் முன்னிலும் அதிகமாகக் கூடியிருந்தது. ‘புலவர் கேற்றுக் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகின்ரு ரோ? அதைக் கேட்போம்” என்ற ஆவலுடன் யாவரும் அமர்ந்திருந்தனர். ஒரு சிலர், 'கேற்றுக் கேட்ட கேள்வி, ஒரு சிக்கலான கேள்விதான். கேள்வியைக் கேட்டவரும் சாதாரணமானவர் அல்லர். அவரும் வடமொழி, தென்மொழி இலக்கணங்களே அறிந்தவர்தாம். ஆதலால், ஒரு வேளே கச்சியப்பர் பதில் கூற முடியாமல் இருக்கவும் நேரிடும்' என்று பேசிக் கொண்டனர். ஒரு சிலர், "அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது. கச்சியப்ப்ர் முருகப்பெருமானுடைய திருவருள் முற்றிலும் பெற்றவர். ஆதலின், அவர்க்கு யாதொரு இங்கோ அவமானமோ வந்திடாது' என்றும்