பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hß தமிழ்ப் புலவர் அறுவர் மேலும் கொண்டாடத் தொடங்கினர். கச்சியப்பருக்கும் கந்தப்பெருமானுக்கும் இருக்கின்ற அன்பின் பிணிப்பை நன்கு அறிந்து கொண்டனர். கச்சியப்பர் ஒரு தெய்வப் புலவர் என்று சிறப்பித்துப் பேசினர். நூலுக்குத் தடை கூறிய புலவர் சபையில் எழுந்து கின்று கச்சியப்பரை வணங்கி, 'ஐயா, உம் பெருமையை உணராமல் என் சிறுமையால் இவ்வாறு இச்சபையில் உம்மைக் கேள்வி கேட்டேன். என்னே மன்னிப்பீராக’’ என்று கேட்டுக் கொண்டார். கச்சியப்பர் அவரை அமரச் செய்து 'அன்பரே, நீர் செய்த உபகாரத்திற்கு கான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்' ர்ே இந்தத் தடையினை எழுப்பவில்லையாயின், முருகப் பெருமான் கேரே வந்து விடைகூறும் பாக்கியத்தைப் பெற்றிருப்பேனு? இக்கால் அம் முருகப்பெருமானுல் திருத்தப்பட்டது என்ற உண்மையும். இதனுல் கன்கு விளங்குகின்ற தன்ருே? நீர் செய்த தடை என்னேயும் பெருமை படுத்தியதல்லவா ? ஆகவே, இதற்கு யான் மன்னிக்க வும் வேண்டுமோ? இதற்கு என் உளமார்ந்த நன்றி யறிதலான வணக்கத்தினைச் செலுத்துகின்றேன் : என்று கூறி மேலே புராணத்தைப் படித்துப் பொருள் கூறிவந்தார். புராணமும் ஒர் ஆண்டுவரை பொருள் விரிக்கப்பட்டு வந்தது. நாவின் அரங்கேற்றமும் இனிதின் முடிந்தது. எல்லோரும் நூலேயும் நூல் ஆசிரி யரையும் போற்றினர். நூலாசிரியரைப் பெருமைப் படுத்தல் இந் நூல் படிக்குந்தோறும் படிக்குங் தோறும் நயம் பல தோன்றக் கூடியது என்றும், படிக்கப் படிக்கப் பொதுவாகத் தெய்வ பக்தியும், தமிழ்மொழியினிடத்து ஆர்வமும், சிறப்பாக முருகப் பெருமானிடத்தில் பேர்