பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ்ப் புலவர் அ.அவர் தவர் என்பதை விளக்கமாகக் கூறவேண்டியதில்லை. சிவாசாரியர் என்னும் சமயப் பெயரால் இவர் குறிப் பிடப்படுவதாலும், காஞ்சி குமர கோட்ட முருகப் பெருமான முப்போதும் திண்டி வழிபட்டு வந்த தாலும், கந்த புராணத்தில் தொட்ட தொட்ட இடங் களில் எல்லாம் சிவ பெருமான் பெருமையினையும் முருகப் பெருமான் மாண்பினையும் விரிவாகவும் விளக் கமாகவும் கூறியிருப்பதாலும் கன்கு அறியலாம். இனி நாம் உணரவேண்டுவது புலவர் பெருந்தகையாரின் காலமேயாகும். கச்சியப்ப சிவாசாரியார் வீரசோழிய நூலாசிரியர் காலத்துக்குப் பின்னும் கம்பருக்கு முன்னும் இருந்த வராக இருக்க வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் துணியாகும். விர சோழியத்தின் காலம் கி. பி. 11-ஆம் நூற்ருண்டு. கம்பரின் காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டு, கம்பர் கந்த புரா ணம் பாட இருந்ததாகவும், ஆல்ை, அது அவருக்கு முன்பே கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளால் பாடப் பட்டுவிட்டமையால் அம்முயற்சியைக் கைவிட்டதாக வும், ஒரு கர்ணபரம்பரைச் செய்தியுண்டு. கம்பரே, 'கச்சியப்பர் என்னும் சுமுவா கந்த புராணம், என்னும் பெருங்கடலேக் கலக்கிற்று ' எனக்கூறி ராமாயணத் தைத் தொடங்கியதாகவும் சிலர் கூறி வருகின்றனர். ஆகவே, கச்சியப்பர் நிலவிய காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இருத்தல்வேண்டும். இதன் விரிவை இன்னமும் பரக்கக்காண விரும்புவோர், திரு. க. சுப்பிரமணியபிள்ளே எம். ஏ., எம். எல்., அவர்கள் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் கண்டு தெளிவாராக