பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலவர் அறுவர் 1. ஒளவையார் தோற்றுவாய் ஒளவையாரைப்பற்றித் தமிழ் காட்டில் அறியா தவர்கள் எவரும் இலர். இளேயர் முதல் முதியர் வரையிலும், ஒளவையாரை அறிவர். ஆனால், அவ் வம்மையாருடைய வரலாறு-ஏன் தமிழ் நாட்டில் வாழ்ந்த சிறந்த புலவர்களின் வரலாறுகள்-முறையாக, ஒழுங்காக அறிவதற்கு இல்லே. ஒளவையார் கலைமகள் அவதாரமே என்பர். ஒளவையார் அவதரித்த வரலாற்றைச் சிவபுெருமான், பார்வதிக்குச் சொல்லினர் என்பர். பாண்டிய நாட் டில் மதுரைமாககளிலிருந்த புலவர்கள் செருக்குற்றிருந் தனர். ஆகையால், அவர்களே அடக்க எண்ணிய சிவபெருமான் பிரமனைத் திருவள்ளுவராகவும், விஷ்ணுவை இடைக்காடராகவும், கலேமகளே ஒளவை யாராகவும் பூவுலகில் பிறக்கும்படி கட்டளே யிட்டனர் என்ப. புலவர்களே ப்பற்றிய வரலாறுகளே அவர்களேக் குறித்துக் கூறப்பட்டுவரும் கர்ணபரம்பரைச் செய்தி களாலும், அவர்கள் அவ்வப்பொழுது பாடிய பாடல் களின் குறிப்புக்களினலும் ஒருவாறு அறிகிருேம். அந்த முறையிலே இங்கு ஒளவையார் வரலாறு கூறப் படுகிறது.