பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ்ப் புலவர் அ.அவர் றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் படைபலம் மிகுதியாகப் பெற்றில்லாமையால் அவன் பகைவரால் தோற்கடிக்கப்பட்டான். அப்போது அவனுடைய மனே பாள் கருவுற்றிருந்தாள். அவள் தன் கணவன் காட்டை யிழந்து தானும் இறந்தமையால் தனக்கு வேறு கதி யின்றி, வெளிக் கிளம்பினுள். தான் பூரண கர்ப்பமாய் இருந்ததால் ஒரு காளி கோயில் பூசாரியாகிய ஆதித்தன் என்பான் இல்லம் அடைந்து அங்கு ஒர் ஆண் குழந்தை யைப் பெற்று இறந்தாள். அக்குழங்தையே கம்பர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இவ்வரலாற்றையே ஆதாரமாகக் கொண்டு கம்பர் உவச்சணுகிய ஆதித்த ஞல் வளர்க்கப்படவில்லே அன்னனுக்கே பிள்ளே யாகப் பிறந்தவர் கம்பர் என்றும் கூறுவர். மற்றும் சிலர், கம்பர் சிறந்த வேளாளர் குடியினர். அதஞல் தான் ராமன் முடிசூட்டிக் கொண்டபோது வேளாளர் குடியினச் சார்ந்த ஒரு பெரியார் முடியினே எடுத்து சிெட்டர் கையில் கொடுக்க, அவர் அதை இராமனுக் குச் சூட்டினர் என்றும், தாம் பாடிய சடகோபர் அந்தாதி என்னும் நூலில் சடகோபராகிய நம்மாழ் வாரைக் குருகர் எம் குலக்கொழுந்தே ’’ என்று குறிப்பிட்டார் என்றும் கம்பர் வேளாள மரபினர் என்பதை வலியுறுத்துவர். கம்பருடைய பிறப்டைப்பற்றி எப்படிப் பலவித மான கதைகள் எழுந்தனவோ அப்படியே அவருடைய :ேயரைப் பற்றியும் பல கதைகள் தோன்றலாயின. ஆம்ப வேளாளர். ஆதலின், அவரது பெற்ருேர் அவ ஆக்குக் காஞ்சிமா நகர த்துக் கடவுளாகிய ஏகம்பர் பெய:ைச் சூட்டக் கருதிச் சுருக்கமாகக் கம்பர் தி க் சூட்டி அழைக்கலாயினர் என்பர். மற்றும்