பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ்ப் புலவர் அ.அவர் பாடும் ஆற்றல் உடையவர் என்பதைக் கேள்விப்பட்ட தைத் தாம் நேரே பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பாடலேப் பாடச் சொன் ஞர். உடனே கம்பர் தட் டுத் தடங்கல் இன்றி, தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலின் காட்டுச் சிறப்பும், அன்னர் கொடைச் சிறப் பும் ஒருங்கே தோன்ற, சூல் கொண்ட எருமை குளத் தில் இறங்கியதும், வரால் மீன்கள் எருமையின் மடியை முட்ட, அவ்வெருமை தன் கன்றுதான் முட்டு கின்றது டோலும் என்ற கருதிப் பாலே வீட்டளவும் சொரியும் திருவெண்ணெய் கல்லூர் யாருடையது எனில், அடைக்காத கதவும், பார்வரினும் அஞ்சாதிர் என்னும் சொல்லும் உடைய சடையப்பன் ஊராகும்’ என்னும் பொருளேயமைத்து, மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால்சிொரியும் வெண்ணெயே-நாட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான சடையப்பன் ஊர். என்று பாடிக் காட்டினர். சடையப்ப வள்ளலுக்குச் சொல்ல முடியாத ஆனந்தம் பொங்கி எழ, அவரை அப்படியே கட்டித் தழுவி இன்புற்ருர், சடையப்ப வள்ளல் வேளாள மரபினர் அல்லவா ? அவர் தம் குலப் பெருமையை விளக்கி ஒரு அலேக் கம்பரைக் கொண்டு பாடுவித்துக் கொள்ள வேண்டு மென்று எண்ணினர். அவ்வெண்ணத்தைக் கம்பருக்கும் கூறலாஞர். கம்பர் யாதொரு மறுமொழியும் கூருது, எழுபது பாடல்களில் ஏர் எழுபது என்னும் பெயரால் ஒரு மாஃப் பாடி முடித்தார். அந்த நாலில் வேளாளர் குடிச் சிறப்பை மிக உயர்த்திப் பாடினர். அந்தணர்