பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழ்ப் புலவர் ஆறுவர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். எப்போதும் பாரம் வலிப் பவர்களும் ஏற்றம் இறைப்பவர்களும் உடல் வருத்தம் தோன்ருதிருக்க ஏதேனும் பாட்டுப் பாடிக் கொண்டே தம் பணியைச் செய்வர். அந்தமுறையில் ஏற்றம்இறைப் பவர்கள் பாடிக்கொண்டே வந்து 'மூங்கில் இலே மேலே ' என்று பாடி ஏற்றம் இறைப்பதை நிறுத்திவிட்டனர். காரணம் வெயில் அதிகரித்து விட்டதனுல் அதற்குமேல் அவர்களால் வெயிலில் வேலை செய்ய இயலவில்லே. கம்பருக்கு அவ்வடியின் பொருள் விளங்கவில்லை. மூங்கில் இலை மேலே என்ன இருக்கும் ? அப்படி ஏதேனும் இருப்பதற்குரிய வசதி அந்த நுண்ணிய மெல்லிய இலையில் ஒன்றும் இல்லையே! இத்தகைய இலைகளில் பறவைகளோ, வண்டுகளோ தங்கவோ, மொய்க்கவோ மாட்டாவே' என்று சிந்தித் துச் சிந்தித்துப் பார்த்தனர். அவருக்குப் பொருள் புலப் படவில்லே. அதன் பொருளை அறிவதற்கு அடுத்த காள் விடியற்காலையில் ஏற்றம் இறைப்பவர் வந்து ஏற்றம் இறைப்பதற்கு முன் அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தார். ஏற்றக்காரர்களும் அங்கு வந்தனர். நேற்று விட்டுச் சென்ற அடியினத் தொடர்ந்து பாடி ஏற்றம் இறைக்கத் தொடங்கினர். அதாவது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பணி நீரே என்று தொடர்ந்து பாடினர். அப்போதுதான் கம்பருக்கு அவ்வடியின் பொருள் புலனுயிற்று. மூங்கில் இலைமேல் பணி நீர் தங்குவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கலாம். அப்பணி நீர் அவ்விலையின் முனையில் தொங்கிக் கொண் டிருக்கும். இதனை அறிந்தப்ோதுதான் கம்பர் ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லே என்பதை உணர்ந்து கொண்டார்.