பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் o குடியானவன் கவி ஒரு குடியானவன் வறுமை காரணத்தால் தானும்: தன் குடும்பமும் வாடவதங்கி வந்தான். அவன் மனேவி தன் கணவனே நோக்கி, 'கம் நாட்டு மன்னனிடம் சென்று பொருள் பெற்று வரக்கூடாதா ?' என்று கூறினுள். அப்போது அவ்வேழைக் குடியானவன் மன்னன் புலவர்கட்குப் பரிசில் தருவானே அன்றி, என் போன் றவர்கட்கு எல்லாம் பரிசு கொடுப்பானே' என்று பதில் அளித்தான். மனேவி உடனே, அதற்கென்ன ! கன்ன பின்ன தென்கு மன்ன என்று பாடினுல் போச்சு” என்று கூறக் குடியானவன் புலவர் போலத் தன்னேஅலங் காரம் செய்துகொண்டு சோழ மன்னன் சபையை நோக் கிப் புறப்பட்டான். போகும் வழியில் இளம் பெண் கள் மரப்பொம்மைகளே வைத்து விளையாடிக்கொண்டு, அந்தப் பொம்மைகளே மண்ணுண்ணி மாப்பிள்ளையே’ என்று கூறிக்கொண்டிருந்தனர். இதனையும் மனனம் செய்துகொண்டான் குடியானவன் சிறிது தூரம் சென்றபின் காக்கையும், குயிலும் கா கா' என்றும் 'கூக’ என்றும் இரைவதைக் கேட்டுக் ' காவிறையே கூவிறையே ’ என்று இவ்விரு தொடர்களையும் சேர்த் துக் கொண்டான். மேலும் சென்றபோது, ஒரு பெருச் சாளி கோவிலில் ஒடுவதைப் பார்த்து, ! உங்கள் அப் பன் கோவில் பெருச்சாளி ' என்று கூறி அதனையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்ருக இணைத்து, மண்ணுண்ணி மாப்பிள்ளேயே காவிறையே, கூவிறையே, உங்கள் அப்பன் கோயில் பெருச்சாளி கன்னு பின்ன தென்னு மன்னு, என்று மனப் பாடம் செய்துகொண்டு புறப்பட்டு