பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${j தமிழ்ப் புலவர் அ.அவர் போனுன். இடைவழியில் தன் நண்பனேக் கண்டு தான் போகும் காரணத்தைக் கூறிப் பாட்டையும் பாடிக் காட்டினுன். அவன் இவனேப் பார்த்துப் " பாட்டுச் சரி தான். இதில் அரசன் பெயர் இல்லையே. அரசன் பெய ரையும் சேர்த்துவிட்டால், மன்னன் உன் பாட்டைக் கேட்டு உனக்குப் பரிசு கொடுப்பான்' என்றதும், மன்னன் பெயராகிய சோழங்கப் பெருமானே' என்று ஈற்றில் சேர்த்துக்கொண்டு அரசவையில் வெகு தைரி யத்துடன் புகுந்தான். அப்போது புலவர்கள் பலர்சூழ மன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான். அந்தச் சமயத்தில் இவன் இப்பாட்டைப் பாடிக் காட்டினன். புலவர்கள் கொல்லெனச் சிரித்தனர். கம்பர் மட்டும் தலையசைத் துப் பாட்டின் நயத்தைச் சுவைப்பவர்போல் பாவனே செய்தனர். மன்னனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. “ என்ன புலவர்கள் யாவரும் இதுவும் ஒரு பாட்டோ என்று எள்ளி கையாடினர் கம்பர் மட்டும் இப்பாட் டில் ஈடுபட்டுப் பாராட்டுகின்ருரே. இப்பாட்டில் ஏதோ பொருள் சிறப்பு இருக்கவேண்டும் ' என்று கம்பரை கோக்கி "ஐய புலவரே, இது ஒரு பாட்டா ? இது எந்த யாப்பில் அடங்கும் இதற்குப் பொருளும் உண்டோ? என்று கேட்க, உடனே கம்பர், “மன்ன! வந்தவர் சாதாரணப் புலவர் அல்லர். கல்வி கேள்விகளில் iல்ல வர். இல்லேயானுல் இப்படிப்பட்ட அருமையான கருத் துக்கள் நிறைந்த கவியைப் பாடி, இருக்க முடியாது. இப்பாடல் இணைக்குறள் ஆசிரியப்பா என்னும் பகுப் பைச் சார்ந்தது. இப்பாட்டின் பொருளே நான் அறிந்த வரை கூறுகின்றேன் கேட்பாயாக. இப்பாட்டின் திரண்ட பொருள், சோழ நாட்டின் தலைவ உலகை உன். திருமாலின் சிறந்த மகனை மன்மதனுக்கு ஒப்