பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழ்ப் புலவர் அ.அவர் ஒரு சாதாரணப் புலவருக்கு கான அடிமையும் அடக்க மும் ஆவேன் இப்புலவருடைய செருக்கை அடக்க வழி காண்பேன்’ என்று கூறித் தன் அரண்மனை புகுக் தான். மந்திரியினிடத்தில் இதைக் கூறிஞன். உடனே அமைச்சன், 'கான் இதற்கு வழி காண்கின்றேன்”என்று அறிவித்து, பொன்னி என்னும் பெயருடைய தாசியை அழைத்து எப். டியும் கம்பர் அவளுக்கு அடிமை என்று எழுதிக் கொடுக்கும்படி செய்து, அவ்வடிமைச் சீட்ட்ைத் தனக்கு அனுப்பிவைக்குமாறு கட்டளையிட் டான். அவளும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டாள். பொன்னி தான் வாழ்ந்து வந்த தெருவில் கம்பர் வருவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கம்பர் வரு வதைக் கண்டு, 'ஐய புலவர் ஏறே, இன்று எம்மில்லத் தில் வந்து தங்கி உணவுண்டு செல்லவேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டுக்கெர்ண்டனள். புலவரும் அதற்கு இணங்கினர். பொன்னி கம்பர் மனம் மகிழும் வண்ணம் உபசாரம் செய்தாள். கம்பர் உவந்து, 'பொன்னி, நான் உனக்குச் செய்யவேண்டியது ஏதேனும் இருந்தால் கூறுக’ என்று கேட்க, அவள் “எனக்கு ஒன்றும் பாடல் வேண்டா. நீர் உம் கைப்படத்'தாசிப் பொன் ளிைக்குக் கம்பன் அடிமை” என்று எழுதித் தந்தால் போதுமானது” என்று கேட்டுக்கொண்டனள். அவரும் அவ்வாறே எழுதிக் கொடுத்து விட்டு வெளியே போய்விட்டனர். ஆடினை ஒலே அரசன் கைக்கு வந்து சேர்ந்தது. குலோத்துங்கன் கையில் ஒலேயை வை த்துக்கொண்டு, சிரித்துச் சிரித்து மகிழ்ந்தான். அடுத்த நாள் சபை