பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3船 தமிழ்ப் புலவர் அ.அவர் டான். அதற்கு ஈடாகத்தான் ஏதேனும் செய்யவேண்டும் என்று கம்பரையே, "தான் செய்ய வேண்டுவது ஏதே னும் இருந்தால் கூறுங்கள்” என்று கேட்கக் கம்பர், நீர் சில மணி நேரம் சோழன் முன் எனக்கு அடிமை போல் கடித்து அடைப்பைக்காரணுக இருக்கவேண்டும்’ என்று கூற அவ்வாறே செய்வதாக மன்னன் ஒப்புக்கொண் _{ శT. கம்பர் மீட்சி குலோத்துங்கன் கம்பர் தம் சபையில் இல்லா திருப்பது குறித்து வருத்தப்பட்டான். பின்பு, அவர் ஓரங்கல் நாட்டு மன்னனிடம் இருப்பதாக அறிந்து, ஆட் களே யனுப்பி அழைத்து வருமாறு பணித்தான். கம்ப ரும் பிரதாபருத்திரனேத் தமக்கு அடைப்பைக்காரனுக அமர்த்திக்கொண்டு, சோழ மன்னனே வந்து கண்டார். சோழன் கம்பரை நோக்கி, தான் புண்படச் செய்தமைக் காக மின்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்பு அடைப் பைக்காரனாக இருப்பவன் யாவன் என்று சோழன் கேட்கக் கம்பர், “அரசே, இவன் உம்போன்ற மன்னன் பிரதாபருத்திரன் நான் கூறிய சபதம் நிறைவேற்ற இம் மன்னனை என் அடைப்பைக்காரகை அமர்த்தில் கொண் டேன்” என்று பதில் அளித்தனர். மன்னன் தன் தவறு களே மன்னிக்குமாறு வேண்டினன். பின்பு சோழனும் கம்பரும் மனங்கலந்த அன்புடையராயினர். பிரதாப ருத்திரனும் கம்பரிடமும் சோழ மன்னனிடமும் விடை பெற்றுப் போயினன். கம்பரும் சோழன் சபையில் விண்மணி போல விளங்கிக் கொண்டிருந்தார். இவையே கம்பரைப்பற்றிய கதைகள் என்று முடிவுகட்டவேண்டா. இன்னமும் பல உள. அவற்றை