பக்கம்:தமிழ்மாலை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10]

சொல்வார். கந்தபுராணக் கதைகளைச் சாடி அது புளுகு மூட்டை என்றவர், மணிவாசகர் வரலாற்றில்நரிகளைப்பரியாக்கிய பகுத்தறிவுக்கு ஒவ்வாஒன்றை இறையருள் என்னும் முலாம்பூசி ஏற்றது வரலாற்றுத் தடத்தில் ஒரு குழியிறக்கமாகும் அல்லது ஒரு நொடிப்பாகும். பொதுவில் மாணிக்கவாசகர் வரலாறு குறிப்பிடத்தக்க வரலாற்றுநூல். மாணிக்கவாசகர் மாண்பு என்னும் நூலில் மணிவாசகரின் பெருமை மட்டுமன்றி வரலாற்றுக் குறிப்புக்களும் உள்ளமையால் இஃதும் ஒரு வரலாற்றுச் சாப்புநூல் ஆகும். -

தம் அறிவாசிரியராகிய சோமசுந்தர நாயகர் வரலாறு ஒரு சிறுநூல். அதில் ஒரு சிறு முற்பகுதிநாயகர் வரலாற்றைச்சுருக்கமாகத்தருகிறது. நாயகர் பற்றியவிவரங்கள் பலவற்றைவிவரமாகப் பெறமுடியாதநிலையில் சுருக்கமாக எழுதிவிவரம் கிடைத்தபின்விரிவாக எழுத இருப்பதாகக் குறித்துள்ளார்.

நூலின் பெரும்பகுதி நாயகர் அவர்கள் கோட்பாடாகிய சைவத்தைப் போற்றுவதும், அதுபற்றிய ஆய்வும், ஆழமும் தெளிவாக்கப்படுகின்றன.நாயகர் தந்தை சைவர் என்றும் அம்மையார் வைணவம் என்றும் கண்டு கூறியுள்ளார். நாயகரது ஒவ்வொரு சைவ நிலையையும் நுணுக்கமாகக் காட்டுபவர் அவர் இல்லறவாழ்வில் நாளிட்டுநிகழ்ச்சிகள் நேரத்தில் நிகழாமை ஒரு பெருங்குறை என்று குறைபடுகிறார்.வரும் அன்பர்களுடன் நெடுநேரம் உரையாடும்நாயகர் பழக்கத்தையும்,தம் மனைவியார்க்குத் தாம் வழங்கிய உரிமை போன்றுநாயகர் அவர்கள் வழங்காக்குறைபாட்டால் நேரந்தவறி நிகழ்வனவற்றையும் எண்ணிக் கவல்கின்றார்.

'வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று பாண்டித்துரைத் தேவரால் சிறப்புற்ற நாயகர் பற்றிய சைவவிளக்கமே நூலில் நிறைந்துள்ளது. 62/L- சொற்களை மிகுதியாகப் பெய்தெழுதும் நாயகர் அவர்கள் தாம் தனித்தமிழில்எழுதுவதைப்பாராட்டிஊக்குவித்துக்காட்டியுள்ளார்.

நூலின் பெரும்பகுதியாகச் சைவசித்தாந்த விளக்கம், மாயாவாதம் பற்றிய குறைகள், வைணவ சமயமறுப்பு திருமால்கண்ணன் பிறப்பு:இருவரும் சிவனுக்குப் படிந்தவர்கள் முதலிய கருத்துக்களே விளக்கப்படுகின்றன.

தாம் எழுதத் துவங்கியதும், பேசத் தொடர்ந்ததும் நாயகர் அவர்கள் எழுத்தாலும் பேச்சாலுந்தான் என்றும், தாம் தொடக்கத்தில் வேதாந்த மாயாவாதத்தில் சிக்குண்டு கிடந்ததையும் நாயகர் அவர்கள் விடுவித்துச் சைவசித்தாந்தியாக்கியதையும் நினைவுகூர்கிறார். தம் வாழ்வின் ஒளியே நாயகர்தான் என்கிறார்.

அடிகளார் தம் நாட்கடமைகளில் விடியலில் செய்யும் வழிபாடு குறிப்பிடத்தக்கது. அம்பலவாணர் முழு வழிபாட்டில் ஈடுபடுபவர். முதலில் தம்

&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/108&oldid=687176" இலிருந்து மீள்விக்கப்பட்டது