பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(7) 'கள்' என்னும் பன்மை விகுதி அஃறிணையில் வரும் என்பது தொல்காப்பிய விதி.

கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே’’ (சொல், 169)

இவ்விதிக்கு மாறாகத் திருக்குறளில் மற்றையவர்கள். பூரியர்கள் ' என உயர்திணைப் பன்மையில் 'கள்' வந்துள்ளது (குறள் 263, 919) . கலித்தொகையில் "ஐவர்கள்' எனக் கள்” (செ. 26) விகுதி உயர்திணையில் வந்துள்ளது.

(8) அன்’ விகுதி ஆண்பால் படர்க்கைக்கே உரியது என்பது தொல்காப்பிய விதி.

அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.'

(சொல். 205)

இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், உரைத்தனன் யானாக', 'அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே’’ (செ. 136, 201) என அன்’ விகுதி தன்மை ஒருமையில் இடம் பெற்றுள்ளது: அகநானூற்றில் நினக்கியான் கிளைஞன் அல்லனோ , 'யான் வாழலனே' , மிகுதி கண்டன்றோ இலனே', நனி அறிந்தன்றோ இலனே’’ (செ. 342, 362, 379, 384) என வழங்கப்பெற்றுள்ளது. நற்றிணையில் கூறுவன் வாழி தோழி , உள்ளினன் அல்லனோ யானே". (செ. 233, 826) என வந்துள்ளது; குறுந்தொகையில், அளியள் யானே' , ' நீயலன் யான் என ’, யானிழந் தனனே', யான் கண்டனனோ விலனோ (செ. 30, 36 , 43, 311) என வழங்கப் பெற். றுள்ளது. -

(9) பலர்பால் படர்க்கையில் வழங்கும் 'மார் ஈற்று

முற்றுச் சொல் பெயர் கொள்ளாது வினை கொண்டு முடியும் என்பது தொல்காப்பிய விதி.