பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

.

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியொடு முடியும் என்ப. '"

(சொல், 207)

இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், 'உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே (செ. 362) என மார்’ ஈறு பெயர் கொண்டு முடிந்துள்ளமை காணத்தகும். இதுவன்றிப் பாடன்மார் எமர் (செ. 375) எனப் புறநானூற்றிலும், காணன்மார் எமர்" (செ. 64) என நற்றிணை யிலும் எதிர்மறையாய் நின்று பெயர் கொண்டு முடிந்துள்ள மையும் காண்க,

(10) வியங்கோள் வினை, முன்னிலை தன்மை ஆகிய இரண்டு இடங்களிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி.

முன்னிலை தன்மை யாயி ரிடத்தொடு மன்னாதாகும் வியங்கோட் கிளவி, '

(சொல் : 226) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், 'நடுக்கின்றி நிலீஇயரோ" (செ. 2) என முன்னிலையில் வியங்கோள் வினை இடம் பெற்றுள்ளது.

(11) மோ' என்னும் அசை முன்னிலைக்கு உரியது என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

மியாயிக மோமதி விகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்"

(சொல். 274) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், 'சென்மோ பெருமளம் விழவுடை நாட்டென' (செ. 381) எனமோ" என்னும் அசை தன்மைக்கண் ஆட்சி பெற்றுள்ளது.

(12) கைக்கிளை முதல் பெருந்திணை இறுதியாகக் கூறப்பட்ட அகப்பொருள் செய்திகள் கலிப்பாவிலும்