பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


'இதனால், கடவுள் வாழ்த்துக் கூறிய கடைச்சங்க காலப் பரிபாடற் செய்யுட்தொகை நூலுக்கு இவர் (தொல்காப்பி யர்) இலக்கணம் முந்தியதாதல் ஒருதலை........உரைகாரர்கள் கடவுள் வாழ்த்தைக் கடைச் சங்கப் பரிபாடலுட் கண்டு அதற்கிலக்கணம் தொல்காப்பியத்துள் அமைத்தற்குப் பல் வகையானும் முயன்று இடர்ப்படுதல் இதனால் உணரலாகும்...... தொல்காப்பியனார் இப்பரிபாடற்குப் பிற்பட்டவ ராயின், தம் இலக்கணத்து இங்ஙனம் காமங் கண்ணாத கடவுள் வாழ்த்து வருவதற்கும் இலக்கணம் கூறியே செல்வர் என்க. ' '2

(1.5) அதோளி, இதோளி, உதோளி என்னும் சுட்டு முதலாகிய இகர இறுதிச் சொற்கள் கடைச்சங்க காலத்தி லேயே வழக்கு வீழ்ந்தன என்பதைப் பேராசிரியர் கீழ்வருமாறு கூறியுள்ளார் : -

'ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகப் பொருள் வேறுபடுதலுமுடைய; அதோளி, இதோளி, உதோளி எனவும் குயினெனவும் நின்ற இவை ஒரு காலத்துளவாகி இக்காலத்திலவாயின; இவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல் செய்தகாலத் துளவன்யினும் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டி னுந் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர் அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலினென்பது (செய், 80)

இங்ஙனம் தொல்காப்பியத்திற்கும் தொகை நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் இவற்றிற்கும் உள்ள வேறுபாடுகள் மேலும் பலவாகும். அவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழத்தார் வெளியிட்டுள்ள

2. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு ,

பக். 306-307