பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

"தமிழ் வரலாறு', 'தொல்காப்பியம்’ என்னும் நூல்களில் கண்டு தெளியலாம்.

மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் இவ் வேறுபாடுகளைக் குறிப்பிட்டு,

இவர் செய்யுள் பற்றியும் வழக்குப் பற்றியும்கூறியுள்ள இலக்கணங்களிற் பலவற்றிற்கு இலக்கியம் காட்டுதல் இப் பொழுது வழங்கும் நூல்களைக்கொண்டு இயலாமையாலும், இவர் கூறிய இலக்கணங்களின் வேறாய்ச் சில சொற்களும் கொள்கைகளும் இந்நூற்களிற் காண்டலானும் இவர் இந்நூற்கெல்லாம் முக்தியவர் என்று துணிதல் ஒரு தலையாவது' (u#. 268)

என்று கூறியிருத்தல் தொல்காப்பியத்தின் பழைமையை நன்கு வலியுறுத்துவதாகும்.

பன்மொழிப் புலவர் வே. வேங்கடராசுலு ரெட்டியார் அவர்கள் தமது 'பரணர் ' என்ற ஆராய்ச்சி நூலில், 'இலக்கண ஆசிரியர்கள் தம் காலத்தனவும் முந்தியனவுமான செய்யுட்களைக்கொண்டு இலக்கணம் செய்தல் மரபு. பரணர், கபிலர், நக்கீரர் இவர்கட்குப் பிற்பட்டவர் தொல் காப்பியராயின் அவர்தம் பாடல்களுக்கு முரணாக விதிகள் செய்திரார் அல்லவா? தொல்காப்பிய சூத்திர விதிகட்கும் அப்புலவர்களின் செய்யுட்களில் காணப்படும் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் சிறந்த இலக்கண மாறுபாடுகள் இருத்தல் ஒன்றே, தொல்காப்பியர் கடைச்சங்கப் புலவராய்

3. மகா வித்துவான் ரா. இராகவையங்கார் எழுதியுள்ள தமிழ் வரலாற்றில் தொல்காப்பியர் கடைச்சங்கப் புலவர்கட்கு முற்பட்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி (பக். 268-273, 308-309) நிறுவியுள்ளார்; வித்துவான் க. வெள்ளை வாரணனார் தொல்காப்பியம், பக். 90-94, 213. டி. ஆர். சேஷ ஐயங்கார் தமது திராவிட இந்தியா' என்னும் பெயர் கொண்ட ஆங்கில நூலில் இதே முடிவைக் (பக். 175-178) குறித்துள்ளமை கவனிக்கத்தக்கது.