பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வடக்கும் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பெளவமென்(று) இக்கான் கெல்லை அகவையிற் கிடந்த நூலதின் உண்மை வாலிதின் விரிப்பின் என்று (பெருங்) காக்கைபாடினியார் தெற்கே குமரியாற்றை எல்லை கூறினர். எனவே, அவர் தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணவர் என்று பேராசிரியர் கருதுவர்.

பின் வந்த (சிறு) காக்கை பாடினியார் வடதிசை ஒழிந்த மற்ற மூன்றிற்கும் கடலையே எல்லையாகக் குறித்தமை,

'வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்’ என்னும் அடிகளால் உணரலாம். இங்ஙணம் கூறியதால், அவர் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவர் என்று பேராசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் (தொல்காப்பியம், செய், நூற்பா , பேராசிரியர் உரை). நச்சினார்க்கினியர் இவரைப் பின்தோன்றிய காக்கை பாடினியார்’ ’ என்பர். சிறு காக்கை பாடினியார் கூறிய எல்லைகளையே கி. பி. இரண் டாம் நூற்றாண்டில் செய்யப்பெற்ற சிலப்பதிகாரமும், "நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்

தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு '

(காதை 8 , வரி 1-2) என்று கூறுகிறது.

தொல்காப்பியருக்குப் பின்பு குமரியாற்றுக்குத் தென்பாற்பட்ட நிலப்பரப்புக்கும் இன்றுள்ள குமரி முனைக்கும்

4. இங்ஙனம் ஒரு நாட்டின் எல்லைகளுள் ஒன்றோ பலவோ ஆறுகளாக அமைதல் இயல்பு என்பதனை, வட வெள்ளாற்றுக்கும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது. சோழநாடு’ என்னும் கூற்றால் உணர்க .