பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்துபட்டதால், தென்திசையும் கடல் எல்லையெனச் சிறுகாக்கை பாடினியாராலும் இளங்கோவடிகளாலும் கூறப்பட்டதெனக் கொள்வதே. பொருத்தமாகும். ஆகவே, தொல்காப்பியர், சிறுகாக்கை பாடினியார் இளங்கோவடிகள் ஆகியோருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பது காண்க.

(2) தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித் தொல்காப்பியம் செய்தார் என்று பனம்பாரனார் தமது பாயிரத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதற்கு ஏற்பவே தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிகளாகவே வகுத்துரைக்கப்பட்டுள்ளது சிறுகாக்கை பாடினியார் வாழ்ந்த பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றின் வேறாக யாப்பு என்னும் இலக்கணம் நான்காவதாக வகுக்கப் பெற்று வழங்கியது என்பது,

  • காட்டியல் வழக்கம் கான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே என்று கூறியுள்ளதிலிருந்து தெளிவாகும். இதற்கு ஏற்றாற் போலவே, பிற்காலத்தவராகிய களவியலுரை ஆசிரியரும்,

தமிழ்தான் நான்கு வகைப்படும்: எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்புமென' என்று தமிழ் இலக்கணத்தை நான்கு வகையாகப் பகுத்தமை காண்க .

குமரியாறு தமிழகத்தின் தென் எல்லையாக இருந்த பொழுது தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பதும், குமரியாற்றுக்கும் இன்றுள்ள குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்து கடலே தென் எல்லையாக அமைந்த,

5. தொல்காப்பியர் காலத்தே குமரியாற்றின் தெற்கே இருந்த தமிழ் வழங்கிய நிலத்தை அடுத்துத் தமிழ் திரிநிலமாகிய குறும்பனை நாடு அமைந்திருந்தமையால், தமிழ்நாட்டின் தென் எல்லையாகக் குமரியாற்றினைக் கூற வேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. ”...வெள்ளை வாரணனார், தொல் காப்பியம், பக்.32.